செய்தி

எபோலா வைரஸ்: கொங்கோவில் 2000 இற்கு மேற்பட்டோர் பலி

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, வைரஸ் மிக அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் குறைந்தது 1,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை வரையிலான தகவல்களின்படி, கொங்கோவின் ஐந்து மாகாணங்களில் மொத்தம் 4,381 எபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 2,011 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஆபிரிக்க நாட்டில் மிக வேகமாகவும், அதிக அளவிலும் பரவி வரும் எபோலா பரவலாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 2014 முதல் 2016 வரை மேற்கு ஆபிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பரவலின் போது 11,310 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி