இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைந்த அபிவிருத்திக்கு 100 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி 2026 – 2031 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2026.02.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கிடைக்கப்பெற்ற அங்கீகாரத்தின் பிரகாரம், இலங்கை அரசுக்கும் உலக வங்கிக் குழுமத்திற்கும் இடையில் இடம்பெற்ற கடன் உடன்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளது.
இவ் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதார ஆற்றல்வளங்களுடன் கூடிய வகுதிகளைப் பலப்படுத்தல், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரை ஊக்குவித்தல், பொருளாதார வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் தொடர்புகளை விரிவாக்கம் செய்வதன் மூலம், மக்களுடைய வாழ்வாதாரங்களை அதிகரித்தல், பேண்தகு பிராந்திய அபிவிருத்தியின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தல் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, உத்தேச வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நிதி ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை