இந்தியாவின் நடவடிக்கையானது எதிர்கால எல்லைப் பேச்சுவார்த்தைகளில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என சீன நிபுணர்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' (Global Times) செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா செய்தி

இந்தியா, சீனாவுக்கிடையில் மீண்டும் தலைதூக்கும் எல்லைப் பிரச்சினை

  • August 11, 2026
  • 0 Comments

இந்தியாவின் நடவடிக்கையானது எதிர்கால எல்லைப் பேச்சுவார்த்தைகளில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என சீன நிபுணர்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ (Global Times) செய்தி வெளியிட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 புவியியல் இடங்களுக்கு இந்தியா முறையான பெயர்களைச் சூட்டியதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகள் சீனாவின் ‘சாங்னான்’ (Zangnan) பிராந்தியத்திற்குட்பட்டவை என அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் உரிமை கோரியுள்ளது. திபெத் தன்னாட்சிப் பகுதியின் ஒரு பகுதியாகச் சீனா உரிமை […]

உலகம்

குழந்தை பருவ தடுப்பூசி உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து – சில தடுப்பூசிகள் நீக்கம்

  • August 11, 2026
  • 0 Comments

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘தங்கத் தர குழந்தை பருவ தடுப்பூசி பரிந்துரைகள்’ ( Gold Standard Childhood Vaccine) என்ற தலைப்பில் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது குழந்தை பருவ தடுப்பூசிகளுக்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மாற்றியமைப்பதோடு, பாடசாலைகளில் தடுப்பூசி தேவைகளை மறுபரிசீலனை செய்யுமாறு மாநிலங்களை வலியுறுத்துகிறது. இந்த புதிய வழிகாட்டுதலில் , குழந்தை பருவ தடுப்பூசிகளை மூன்று தனித்தனி அடுக்குகளாக வகைப்படுத்துகிறது. இதன் மூலம், உலகளவில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 11 முக்கிய தடுப்பூசிகளாகக் […]

கொலம்​பி​யா​வில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 2,000 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகம் செய்தி

கொலம்பியாவில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு: 2000 பேர் மாயம்

  • August 11, 2026
  • 0 Comments

கொலம்​பி​யா​வில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 2,000 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொலம்​பி​யா​வின் சோகோ மாகாணம், சான் ஹோசே டெல் பால்மர் நகரை மைய​மாகக் கொண்டு நேற்று சக்​தி​வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அலகில் 7.4 ஆகப் பதி​வானது. இந்த பூகம்​பகத்​தால் சான் ஹோசே டெல் பால்​மர், கலி, பெரே​ரா, மனி​சாலெஸ் உள்​ளிட்ட நகரங்​களில் ஏராள​மான கட்​டிடங்​கள் இடிந்து விழுந்​தன. இதில் இதுவரை சுமார் […]

உலகம்

ஹாலிஃபாக்ஸில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • August 11, 2026
  • 0 Comments

ஹாலிஃபாக்ஸில் (Halifax) உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) வைத்து நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் அருகில் இருந்த வாகனத்தில் இருந்து வெடிக்கக்கூடிய திரவங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நபரின் பெயரையோ அல்லது அவரது மிரட்டலுக்கு என்ன காரணம் என்பதையோ புலனாய்வாளர்கள் வெளியிடவில்லை. இதேவேளை கனடாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு இதுவரை இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், டொரெண்டோவில் […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லாவிற்கு வடக்கே உள்ள சின்ஜில் (Sinjil) பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோதக் குடியேற்றப் பகுதிக்கு (Settler Outpost) சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய நிர்வாக உத்தரவுகளை இஸ்ரேல் வழங்கியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மேற்குக் கரையில் தொடரும் ஆக்கிரமிப்பு: புதிய குடியேற்றத்திற்கு இஸ்ரேல் அனுமதி

  • August 11, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லாவிற்கு வடக்கே உள்ள சின்ஜில் (Sinjil) பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோதக் குடியேற்றப் பகுதிக்கு (Settler Outpost) சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய நிர்வாக உத்தரவுகளை இஸ்ரேல் வழங்கியுள்ளது. பாலஸ்தீனச் செய்தி முகமையான Wafa இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனக் குடியேற்றம் ஆணையத்தின் (Palestinian Colonization and Wall Resistance Commission) அறிக்கையை மேற்கோள் காட்டி Wafaவெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலின் ‘சிவில் நிர்வாகம்’ என அழைக்கப்படும் அமைப்பு, ‘கிவாத் ஹரேல்’ (Givat Har’el) […]

உலகம்

கிரீன்லாந்தில் கச்சா எண்ணெய் ஆய்வை நடத்த அமெரிக்க நிறுவனம் முயற்சி

  • August 11, 2026
  • 0 Comments

முறையான அனுமதி இல்லாமல் துளையிடும் கருவிகளைக் கரைக்குக் கொண்டு சென்றதற்காக, டெக்சாஸை தளமாகக் கொண்ட கிரீன்லாந்து எனர்ஜி நிறுவனத்திற்கு கிரீன்லாந்து அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜேம்சன் லேண்ட் படுகையில் 1 டிரில்லியன் டொலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் இருப்பதாக நம்பும் கிரீன்லாந்து எனர்ஜி, அங்கு ஆய்வுத் துளையிடுதலுக்காக 60 மில்லியன் டொலர் முதலீடு செய்ய இலக்கு வைத்துள்ளது. அந்நிறுவனத்தின் முந்தைய  அனுமதி காலாவதியாகிவிட்டதை பிராந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் எதிர்கால தளவாடங்கள் அனைத்திற்கும் முன் அனுமதி […]

அமெரிக்கா போர் இழப்பீடு வழங்கினால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) திறக்க முடியும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ள நிலையில், ஈரானால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நபர்களுக்காக அந்நாட்டிடமிருந்து அமெரிக்கா இழப்பீடு பெற வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். உலகம் செய்தி

ட்ரம்பின் இழப்பீட்டு கோரிக்கை திட்டத்தால் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் முட்டுக்கட்டை

  • August 11, 2026
  • 0 Comments

அமெரிக்கா போர் இழப்பீடு வழங்கினால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) திறக்க முடியும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ள நிலையில், ஈரானால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நபர்களுக்காக அந்நாட்டிடமிருந்து அமெரிக்கா இழப்பீடு பெற வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். ஹோர்முஸ் நீரிணை திறப்பு பற்றி பேச்சுகள் இடம்பெற்றுவரும் நிலையில், ட்ரம்ப் இந்த கோரிக்கையை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பான ஈரானின் பிடியை இது மேலும் வலுப்படுத்தக்கூடும் […]

“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு ஜனநாயக வழியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் கூட்டு எதிரணி மேற்கொள்ளும்” என்று சட்டத்துறை பேராசிரியரும் முன்னாள் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்போம்: பீரிஸ் சபதம்

  • August 11, 2026
  • 0 Comments

“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு ஜனநாயக வழியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் கூட்டு எதிரணி மேற்கொள்ளும்” என்று சட்டத்துறை பேராசிரியரும் முன்னாள் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில்  நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மிகவும் ஆபத்தானது. அது பாரிய பாதக விளைவுகளையே ஏற்படுத்தும். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது மட்டுமல்லாமல், இது ஏனைய […]

கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொலம்பியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு: அவசரநிலை பிரகடனம்

  • August 11, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நூற்றாண்டில் அந்நாட்டைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவென அதிகாரிகள் விவரித்துள்ளனர். திங்கள்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காலி (Cali), பெரைரா (Pereira), கிப்டோ (Quibdo) மற்றும் மேனிசேல்ஸ் (Manizales) உள்ளிட்ட மேற்கு கொலம்பிய நகரங்களை கடுமையாகப் பாதித்ததோடு, அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் உணரப்பட்டது. தலைநகர் போகொடாவில் இருந்து […]

உலகம்

கொலம்பிய நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு

  • August 10, 2026
  • 0 Comments

கொலம்பியாவின் பசிபிக் மாகாணமான சோகோவில், 79 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. தொடர்புடைய செய்தி கொலம்பியா நிலநடுக்கம்: 20 இற்கு மேற்பட்டோர் பலி