ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக இணைய வலையமைப்பை வலுப்படுத்தும் ரஷ்யா
ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக, ரஷ்யா தனது ராஸ்வெட் (Rassvet) செயற்கைக்கோள் இணைய வலையமைப்பை விரைவாக நிறுவி வருவதாக உக்ரேனிய இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பியூரோ 1440 என்ற விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ராஸ்வெட், தற்போது 16 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது.
2027 இற்குள் 292 ஆகவும், 2035இற்குள் 924 ஆகவும் இதை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகளால் பயன்படுத்தப்படும் கள்ளச் சந்தை முனையங்களைச் செயலிழக்கச் செய்யுமாறு ஸ்பேஸ்எக்ஸிடம் கீவ் பரிந்துரைத்த பிறகு, உக்ரேனின் ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் தகவல் தொடர்புகளுக்கு ஸ்டார்லிங்க் ஒரு முக்கிய அனுகூலமாகத் இருந்து வருகிறது.
இந்நிலையில் ராஸ்வெட் தற்போது உக்ரேனின் வான்பரப்பில் அவ்வப்போது மட்டுமே இயங்குகிறது. ஆனால் ஒரு முழுமையான செயற்கைக்கோள் தொகுப்பு ஸ்டார்லிங்கைப் போலவே செயல்படும் என்று மேஜர் ஜெனரல் வதிம் ஸ்கிபிட்ஸ்கி (Vadym Skibitskyi) குறிப்பிட்டார்.
ரஷ்ய செயற்கைக்கோள் வலையமைப்பு அதன் முழு செயல்பாட்டுத் திறனை அடைந்தவுடன், அதை எதிர்கொள்வதற்கான உத்திகளை உக்ரேனிய அதிகாரிகள் ஏற்கனவே வகுத்து வருகின்றனர்.




