கொலம்பியாவின் அரசாங்க அலுவலகங்களுக்கு வெளியே கார்குண்டு தாக்குதல்
கொலம்பியாவின் வில்லவிசென்சியோ நகரில் உள்ள அரசாங்க அலுவலகங்களுக்கு வெளியே இன்கு கார்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 23 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்டா மாகாணத்தில் சமீபத்தில் நடந்த இராணுவத் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் விதமாக, ஃபார்க் அமைப்பின் எஞ்சியிருக்கும் ஒரு குழுவால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்நிலையில் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அபெலார்டோ டி லா Abelardo de la Espriella உறுதியளித்துள்ளார்.
கிளர்ச்சிக் குழுக்களும் போதைப்பொருள் கும்பல்களும் பிராந்தியத்திற்காகப் போட்டியிடுவதால், கொலம்பியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பரவலான வன்முறை அதிகரித்து வரும் வேளையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




