புதிய டிஜிட்டல் நுழைவு முறை அமுல்படுத்தப்படுவதை தாமதப்படுத்த பரிசீலனை
கடுமையான எல்லைக் குழப்பங்களையும் விமான நிலைய நெரிசல்களையும் தடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் தனது டிஜிட்டல் நுழைவு/வெளியேறுதல் முறையை முழுமையாகச் செயல்படுத்துவதை தாமதப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை செயற்படுத்துவற்கு இறுதிநாளாக செப்டம்பர் 6 ஆம் திகதி காலகெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பிறகும் தாமதப்படுத்த பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து போக்குவரத்துச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டருடன் (Heidi Alexander) நடத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பயோமெட்ரிக் சோதனைகள் இடைநிறுத்தப்படலாம் என்று ஐரோப்பிய ஒன்றியப் போக்குவரத்து ஆணையர் அப்போஸ்டோலோஸ் சிட்சிகோஸ்டாஸ் (Apostolos Tzitzikostas) தனிப்பட்ட முறையில் உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய நுழைவு/வெளியேறுதல் முறையானது, 29 ஷெங்கன் நாடுகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் ஐரோப்பிய ஒன்றியம் சாராத பயணிகள், கைரேகைகள் மற்றும் முகப் புகைப்படங்கள் போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோருகிறது.
இது, கையால் செய்யப்படும் கடவுச்சீட்டு முத்திரைகளுக்கு மாற்றாக அமைகிறது.




