உலகம்

பொதுமக்களின் கப்பல்கள் கைப்பற்றப்பட வேண்டும் – சீன ஆய்வாளர் வலியுறுத்து

  • August 17, 2026
  • 0 Comments

போர்க்காலத்தில் இராணுவம் பொதுமக்களின் கப்பல்களைக் கைப்பற்ற அனுமதிக்கும் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துமாறு சீனாவின் உயர்மட்டப் பொருளாதாரத் திட்டமிடல் ஆய்வாளர் ஒருவர் வலியுறுத்தி வருகிறார். 1982 ஃபாக்லாந்து போரின்போது பிரிட்டன் தனது வர்த்தகக் கப்பல் படையை எவ்வாறு பயன்படுத்தியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் லி ஜின் Li Jin இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். கடந்த மாதம் […]

ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. செய்தி பொழுதுபோக்கு

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

  • August 17, 2026
  • 0 Comments

ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, “எங்களது அன்பிற்குரிய ஹைடனின் துயரமான மறைவை மிகுந்த மனவருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர் ஒரு சிறந்த ஆளுமையாகவும், அவரை அறிந்தவர்களுக்கும், திரையில் அவரைக் கண்ட லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் அளப்பரிய அன்பையும் மகிழ்ச்சியையும் தந்தவராக விளங்கினார்” என்று தெரிவித்தார். ஹைடன் பேனெட்டியரின் மறைவு […]

உலகம்

இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் பதிவு

  • August 17, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி 51 பேர் உயிரிழந்ததைத் தொர்ந்து மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட புளோரஸ் பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது. இது சுமார் 10 கி.மீ ஆழத்தில், மையம் கொண்டிருந்ததாக ஜெர்மனியின் GFZ புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.

எதிர்வரும் ஆண்டே தமது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளதன் மூலம், கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு பற்றிய எதிர்பார்ப்புகளை மீண்டும் அதிகரித்துள்ளார். செய்தி விளையாட்டு

கால்பந்து உலகுக்கு விடைகொடுக்க தயாராகிறார் ரொனால்டோ

  • August 17, 2026
  • 0 Comments

எதிர்வரும் ஆண்டே தமது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளதன் மூலம், கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு பற்றிய எதிர்பார்ப்புகளை மீண்டும் அதிகரித்துள்ளார். 41 வயதான போர்ச்சுகல் அணியின் தலைவரான இவர், 2002-இல் ஸ்போர்ட்டிங் கிளப் மூலம் தனது மூத்த வீரருக்கான பயணத்தைத் தொடங்கியதிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், யுவென்டஸ் மற்றும் தற்போதைய அல்-நாசர் அணிகளுக்காகப் பல்வேறு முக்கிய கோப்பைகளை வென்று, எக்காலத்திற்கும் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஐந்து […]

தேடப்படும் குற்றவாளிகள் மன்னார் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, வடக்கில் பாக்கு நீரிணைப் பகுதியில், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செய்தி

பாக்கு நீரிணையில் உச்சகட்ட பாதுகாப்பு

  • August 17, 2026
  • 0 Comments

தேடப்படும் குற்றவாளிகள் மன்னார் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, வடக்கில் பாக்கு நீரிணைப் பகுதியில், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துலக ஆட்கடத்தல் சக்திகளின் ஆதரவுடன், மிகவும் தேடப்படும் பிரபல குற்றவாளிகள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து மத்திய கிழக்கு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வாரம், 34 மற்றும் 35 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள், மன்னார் வழியாகப் படகில் இந்தியா சென்றடைந்த சிறிது நேரத்திலேயே இந்திய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர். […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஒருவழியாக உடன்பாட்டிற்கு வந்த ஈரான் – ஓமான்

  • August 16, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்திக்கான கப்பல் வழித்தட வரைபடம் குறித்து ஈரான் ஓமானுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தடைகள் இருந்தபோதிலும்” கடந்த மூன்று வாரங்களாகப் பேச்சுவார்த்தைகள் சாதகமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் எஞ்சிய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஏற்பாடு, இரு நாடுகளின் இறையாண்மையைப் […]

உலகம்

ஷேக் ஹசீனாவால் இந்தியா -பங்களாதேஷ் இராஜதந்திர உறவில் விரிசல்?

  • August 16, 2026
  • 0 Comments

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்தும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவிற்கு வரமாட்டார் என்று வங்கதேசம் உறுதி செய்துள்ளது. 2024-ல் போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற முன்னாள் பிரதமரை இந்திய அரசு திருப்பி அனுப்பும் வரை பிரதமர் இந்தியாவிற்கு வரமாட்டார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தைக் கவிழ்த்த, உயிரிழப்புகளை ஏற்படுத்திய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு அவர் அண்டை நாடான இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். மனிதகுலத்திற்கு […]

உலகம்

வவுனியா தொடக்கம் அம்பாறை வரை – வெப்ப எச்சரிக்கை

  • August 16, 2026
  • 0 Comments

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  நாளைய தினம் (17) பகல் நேரத்தில் மேற்கூரிய மாவட்டங்களில் சில இடங்களில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே  சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து […]

ஐரோப்பா

மென்செஸ்டர் நோக்கிச் சென்ற  பயணிகள் விமானம் ரஷ்யாவில் தரையிறக்கம்

  • August 16, 2026
  • 0 Comments

மென்செஸ்டர் நோக்கிச் சென்ற  பயணிகள் விமானம் ஒன்று, சைபீரியாவின் உட்பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து மென்செஸ்டர் நோக்கிச் சென்ற ஹைனான் HU753  ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இந்த அவசர தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. விமானிகள் சிக்கலைக் கண்டறிந்த பிறகு, ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள கிராஸ்னோயார்ஸ்க் Krasnoyarsk நகரை நோக்கி விமானத்தை செலுத்தியுள்ளனர். அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் விமான […]

உலகம்

இஸ்லாமிய குடியரசு நாடுகளின் நேட்டோ – எகிப்து இணைய வாய்ப்பு

  • August 16, 2026
  • 0 Comments

இஸ்லாமிய குடியரசு நாடுகள் உருவாக்கிய நேட்டோ தரத்திலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அடுத்ததாக எகிப்து இணையக்கூடும் என துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் Recep Tayyip Erdogan சூசகமாகத் தெரிவித்தார். அல் ஜசீராவிடம் பேசிய எர்டோகன், பிராந்திய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் முயற்சிகளில், எகிப்தை இந்த ஒப்பந்தத்தில் இணைப்பது ஒரு இயல்பான அடுத்த கட்டமாக இருக்கலாம் என்று கூறினார். மக்கா உச்சி மாநாட்டிற்கு முன்பு, எகிப்திய அதிகாரிகள் மூன்று நிறுவன உறுப்பினர்களுடன் பல மாதங்களாக ஆயத்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றதாகவும் […]