ஐரோப்பா

ஸ்டாஃபோர்ட்ஷயரில் கோர விபத்து – M6 நெடுஞ்சாலை மூடல்

பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்ட்ஷயரில் Staffordshire  மூன்று கனரக வாகனங்கள் மற்றும் கார் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தானது இன்று அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக  ஸ்டாஃபோர்ட்ஷயரில் உள்ள M6 வடக்கு நோக்கிய சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை இன்று பிற்பகல் வரை மூடப்பட்டிருக்கும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாஃபோர்ட்ஷயர் காவல்துறை Staffordshire Police , வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் West Midlands  ஆம்புலன்ஸ் சேவை, ஸ்டாஃபோர்ட்ஷயர் Staffordshire  தீயணைப்பு மற்றும் மீட்புப் படை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

மேலும் இந்த கோர விபத்தின் காரணமாக  வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்குமாறும், மாற்று வழிகளைத் தேடுமாறும் அல்லது தங்கள் பயணங்களைத் தாமதப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்