ஈரான் எந்த வகையிலும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் எந்த வகையிலும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்கப்படக்கூடாது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல்’ தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்திடப்பட்ட 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம், நிரந்தர அமைதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாமல் அதன் காலாவதி திகதியை எட்டியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான முற்றுகையைக் கையாள்வதோடு, ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதை அசல் ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இருப்பினும் இந்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தியில் இருநாடுகளும் முற்றுகையை தொடர்வதால், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.




