ஐரோப்பா

பிரெஞ்சு தூதரகத்தின் இரு ஊழியர்கள் ஈரானுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு

பிரெஞ்சு தூதரகத்தின் இரு ஊழியர்கள் ஈரானுக்குள் மீளவும் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தூதரகங்களின் விதிகள் மற்றும் சலுகைகளை வரையறுக்கும் வியன்னா உடன்படிக்கையை மீறி, ஈரானிய குடிமைச் சமூகத்திற்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் விளக்கமளித்துள்ளது.

ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி Esmaeil Baghaei இன்று இதனை அறிவித்துள்ளார்.

மேற்கத்தேய நாடுகள் தனது உள்விவகாரங்களில் தலையிடுவதாக ஈரான் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையே பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், கடந்த மாதம் பிரான்ஸ் இன்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சம்பந்தப்பட்ட இரண்டு தூதரக ஊழியர்களின் பணி, “ஈரானிய குடிமைச் சமூகம், மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களை உருவாக்குவதே என்று கூறியுள்ளார்.

“ஈரானிய குடிமைச் சமூகத்திற்காக உலகில் அதிகம் செய்யும் நாடுகளில் பிரான்சும் ஒன்றாகும், அதற்கான விலையை நாங்கள் கொடுத்துள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்