பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வியூகங்கள் குறித்து, இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதன்முறையாக மனம் திறந்து விரிவாகப் பேசியுள்ளார். இந்தியா செய்தி

‘ஆபரேஷன் சிந்தூர்’ : பிரதமர் மோடி வழங்கிய உத்தரவு-பல மாதங்களுக்கு பிறகு வெளியான தகவல்

  • August 17, 2026
  • 0 Comments

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வியூகங்கள் குறித்து, இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதன்முறையாக மனம் திறந்து விரிவாகப் பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்பியதை நினைவுகூர்ந்த தோவல் கூறியதாவது: “விமான […]

பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 3,09,000 பேர் மியான்மரின் ராகைன் (Rakhine) மாநிலத்தின் முன்னாள் குடியிருப்பாளர்கள் என்பதை மியான்மரின் இராணுவ ஆதரவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. உலகம் செய்தி

பாதுகாப்பு சீரான பின்னரே ரோஹிங்கியா அகதிகள் மீட்பு: மியான்மர் நிபந்தனை

  • August 17, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 3,09,000 பேர் மியான்மரின் ராகைன் (Rakhine) மாநிலத்தின் முன்னாள் குடியிருப்பாளர்கள் என்பதை மியான்மரின் இராணுவ ஆதரவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், ராகைன் மாநிலத்தில் பாதுகாப்புச் சூழல் மேம்பட்ட பின்னரே அவர்களை மீள அழைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பங்களாதேஷினால் சமர்ப்பிக்கப்பட்ட 8,28,824 பெயர்கள் அடங்கிய பட்டியலில், ஜூலை 31 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 3,08,797 பேர் ராகைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மியான்மர் வெளியுறவு […]

“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மீனவர் பிரச்சினை: தமிழக அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகும் அமைச்சர் சந்திரசேகர்

  • August 17, 2026
  • 0 Comments

“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் எனவும், அத்தேர்தலில் அரசாங்கமே வெற்றிபெறும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அது ஒரு நல்ல […]

ஐரோப்பா

கிரேக்கத்தில் காட்டுத்தீ – தம்பதியர் பலி, குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்

  • August 17, 2026
  • 0 Comments

கிரேக்கத் தீவான சலாமினாவில் Salamina காட்டுத்தீயில் சிக்கி தம்பதியர் உயிரிழந்துள்ளனர். பெரிஸ்டேரியா Peristeria கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. குறித்த பகுதியில் வீசிய பலத்த காற்றால் தீ குடியிருப்பு பகுதிகளுக்கு வேகமாக பரவ வழிவகுத்துள்ளது. பெரிஸ்டேரியா மற்றும் செலினா பகுதிகளில் காட்டுத்தீ அச்சம் நீடிப்பதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், கடல் வழியாக மக்களை வெளியேற்ற படகுகளைப் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் சுமார் 260 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 15 தரைப்படைகள், 10 […]

22வது அரசியலமைப்பு திருத்த வரைவு தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சுதந்திரம் குறித்த, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்வைட் எழுப்பிய கவலைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் என்று, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

ஐ.நாவில் இருந்து வந்த கடிதம்: பதிலளிக்க தயாராகிறது இலங்கை

  • August 17, 2026
  • 0 Comments

22வது அரசியலமைப்பு திருத்த வரைவு தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சுதந்திரம் குறித்த, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்வைட் எழுப்பிய கவலைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் என்று, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக, அரசியலமைப்பைத் திருத்தும் முன்மொழிவு குறித்து, அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில், சட்டர்வைட் கவலை தெரிவித்திருந்தார். முன்மொழியப்பட்டதாகக் கூறப்படும் வடிவத்திலும் அதன் தாக்கங்களிலும், இந்தத் திருத்தம், “நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமை, அதிகாரப் […]

இந்தியா

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் தீவிபத்து – 07 பேர் உயிரிழப்பு

  • August 17, 2026
  • 0 Comments

மும்பையில் 04 மாடிக் கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அவசரக்கால மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தற்போது 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் பணியாற்றி வருகின்றனர். மேலும் தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மேற்கு வங்கத்தின் தாராபீத் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலும் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில்  07 […]

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுடனான தனது மிகச்சிறந்த நல்லுறவை சுட்டிக்காட்டி, தென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியைக் குறைக்க ட்ரம்ப் முடிவு

  • August 17, 2026
  • 0 Comments

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுடனான தனது மிகச்சிறந்த நல்லுறவை சுட்டிக்காட்டி, தென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானை அணுஆயுதமற்ற நாடாக மாற்றும் முயற்சியில் அமெரிக்காவுடன் இணையுமாறு தென் கொரியாவிடம் கேட்டபோது, அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் ட்ரம்ப் தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் குறிப்பிட்டுள்ளார். “இந்த ராணுவப் பயிற்சிகள் அதிகச் செலவு பிடிப்பவை […]

ஐரோப்பா

ரஷ்யாவை வெறிகொண்டு தாக்கிய உக்ரைன் – 06 பேர் உயிரிழப்பு

  • August 17, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் 800இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஏவி உக்ரைன் நேற்று  தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக தெற்கு மற்றும் மேற்கு ரஷ்யாவில் உள்ள 17 பிராந்தியங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலால் ரஷ்ய மின் வணிக நிறுவனமான வைல்ட்பெர்ரீஸுக்குச் […]

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் உள்ள 'மெனிண்டி லேக்ஸ்' (Menindee Lakes) பகுதியின் காவண்டிலா ஏரியில் (Lake Cawndilla) சுமார் 400 இளம் பெலிகன் (Pelican) பறவைகள் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பறவைகள் மர்மமாக உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

  • August 17, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் உள்ள ‘மெனிண்டி லேக்ஸ்’ (Menindee Lakes) பகுதியின் காவண்டிலா ஏரியில் (Lake Cawndilla) சுமார் 400 இளம் பெலிகன் (Pelican) பறவைகள் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்த பறவைகள் இறப்பிற்கு எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் காரணம் அல்ல என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலியலாளர் டேமியன் குக் (Damien Cook) என்பவர் படகுச் சவாரி மேற்கண்டபோது, இந்த பெலிகன் பறவைகள் கொத்துக் கொத்தாக இறந்து கிடப்பதாக […]

உலகம்

பொதுமக்களின் கப்பல்கள் கைப்பற்றப்பட வேண்டும் – சீன ஆய்வாளர் வலியுறுத்து

  • August 17, 2026
  • 0 Comments

போர்க்காலத்தில் இராணுவம் பொதுமக்களின் கப்பல்களைக் கைப்பற்ற அனுமதிக்கும் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துமாறு சீனாவின் உயர்மட்டப் பொருளாதாரத் திட்டமிடல் ஆய்வாளர் ஒருவர் வலியுறுத்தி வருகிறார். 1982 ஃபாக்லாந்து போரின்போது பிரிட்டன் தனது வர்த்தகக் கப்பல் படையை எவ்வாறு பயன்படுத்தியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் லி ஜின் Li Jin இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். கடந்த மாதம் […]