இலங்கை

மட்டக்களப்பு – கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் கோர விபத்து – இருவர் பலி

  • August 23, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு – கோட்டைக்கல்லார் பிரதான சாலையில், கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். நேற்று இரவு சுமார் 9:21 மணியளவில், சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது. மோதலைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள்களில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையை கடக்க தயாராக இருந்த 03 மாணவர்கள் மீது மோதியுள்ளது. இதில்  18 […]

ஐரோப்பா செய்தி

பொதுத் தேர்தல் உக்ரைனை அழித்து விடும் – ஜெலென்ஸ்கி

  • August 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடனான போர் தொடரும் வேளையில், உக்ரைனில் போர்க்காலத் தேர்தலை நடத்துவது, உக்ரைனியர்களைப் பிளவுபடுத்தி நாட்டை “அழித்துவிடும்” என்று ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாம் நாட்டை அழிக்க விரும்பினால், இந்த வகையான போரின்போது தேர்தல்களை நோக்கி நகரலாம் என்று நான் நம்புகிறேன்,” என்றார். இதற்கிடையே போர்க்காலத்தில் தேர்தல்கள் நடத்துவது உக்ரைனிய சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. ஜெலென்ஸ்கியின் ஏற்பு விகிதம் […]

இலங்கை

முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான வயது எல்லை நிர்ணயம்

  • August 23, 2026
  • 0 Comments

இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எதிர்காலத்தில் 40ஆக உயர்த்தப்பட்டலாம் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹெவாகே தெரிவித்துள்ளார். பாடசாலைக் கல்வியை முடித்த உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மூலம் நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை எடுத்துரைக்கும்போது ஹெவாகே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இலங்கையின் எதிர்காலம், திறமையான மற்றும் ஆற்றல்மிக்க ஒரு இளம் தலைமுறையை […]

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இலங்கை செய்தி

ஐ.நா. கூட்டத்தொடர் செப்டம்பர் 22 ஆரம்பம்: இலங்கை சார்பில் விஜித ஹேரத் பங்கேற்பு

  • August 23, 2026
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஐ.நா. பொதுச்சபையின் 81-ஆவது அமர்வின் உயர்மட்ட விவாதம் செப்டம்பர் 22 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இதில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதில் கலந்துகொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் சார்பில் […]

ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான புதிய அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டாம் என அதன் அண்டை நாடுகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரான மொஹ்சன் ரெசாய் கடுமையாக Mohsen Rezaei எச்சரித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘பொருளாதார இலக்குகளைத் தாக்குவோம்’ – அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

  • August 23, 2026
  • 0 Comments

ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான புதிய அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டாம் என அதன் அண்டை நாடுகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரான மொஹ்சன் ரெசாய் கடுமையாக Mohsen Rezaei எச்சரித்துள்ளார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணையை தனது “புதிய நிலப்பரப்பு” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வணிக நலன்களுக்கு எதிராகவும் ஈரான் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாதப் போக்கு […]

கனடா மீதான அமெரிக்காவின் புதிய வரியானது , எம்மை திட்டமிட்ட அடிப்படையில் பிரித்து காயப்படுத்துவதற்கான ஒரு "தவறான கணக்கீடு” என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

திட்டமிட்டு காயப்படுத்தும் செயல்: வரிப்போர் குறித்து கனடா பிரதமர் அதிருப்தி

  • August 23, 2026
  • 0 Comments

கனடா மீதான அமெரிக்காவின் புதிய வரியானது , எம்மை திட்டமிட்ட அடிப்படையில் பிரித்து காயப்படுத்துவதற்கான ஒரு “தவறான கணக்கீடு” என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை காலை கனடிய மக்களுக்கு ஆற்றிய உரையில், “அவர்கள் மிக அதிகமாகக் கேட்டார்கள்; ஆனால் மிகக் குறைவாகவே வழங்கினார்கள்” என்று கனடா பிரதமர் கார்னி குறிப்பிட்டார். மேலும், அமெரிக்காவின் கடுமையான புதிய வரிகளைத் தொடர்ந்து, நாடு தற்போது ஒரு வர்த்தக “போரில்” ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் 8 […]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினரால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு: பிரதமரிடம் மகஜர் கையளிப்பு

  • August 23, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினரால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமரை, நிகழ்வு நிறைவடைந்த பின்னர் வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர். […]

உலகம்

ஜப்பானின் இபராகியில் நிலநடுக்கம் பதிவு

  • August 22, 2026
  • 0 Comments

ஜப்பானின் இபராகியில் இன்று 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தகவல்படி இந்த நிலநடுக்கமானது, ஜப்பானின் ஹொன்ஷு தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில், 37 கி.மீ (23 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பகுதியில், குறைந்தது 18 பேர் உயிரிழந்து 62 பேர் காயமடைந்த, பேரழிவுகரமான நிலநடுக்கம் ஏற்பட்டு சில நாட்களில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

இலங்கை

பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை இனி Online இல் சமர்ப்பிக்கலாம்

  • August 22, 2026
  • 0 Comments

டிஜிட்டல் தரவு அமைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளதால், பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை இனி வழமையான இணையவழி நடைமுறையின் மூலம் சமர்ப்பிக்கலாம் என இலங்கை பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்கள், பத்தரமுல்ல, சுஹுருபாய கட்டிடத்தின் 17-வது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் அனுமதிப் பிரிவால் செயலாக்கப்படுகின்றன. விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், தொடர்புடைய அறிக்கைகளைக் கோருதல் மற்றும் அனுமதிச் சான்றிதழ்களை வழங்குதல் ஆகியவை டிஜிட்டல் தரவு அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் 2026 ஆகஸ்ட் 20 […]

ஐரோப்பா

சுவீடன் வாள்வெட்டுச் சம்பவம் – 18 வயதுடைய இளைஞர் கைது

  • August 22, 2026
  • 0 Comments

சுவீடனின் ஃபாகர்ஸ்டாவில் Fagersta உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதல்தாரி பிறரின் தூண்டுதல் இன்றி தனியாக செயற்பட்டதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அதிகாரிகள் பாதுகாப்பு கெமராக்களை தற்போது ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, […]