ஐரோப்பா செய்தி

பொதுத் தேர்தல் உக்ரைனை அழித்து விடும் – ஜெலென்ஸ்கி

ரஷ்யாவுடனான போர் தொடரும் வேளையில், உக்ரைனில் போர்க்காலத் தேர்தலை நடத்துவது, உக்ரைனியர்களைப் பிளவுபடுத்தி நாட்டை “அழித்துவிடும்” என்று ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாம் நாட்டை அழிக்க விரும்பினால், இந்த வகையான போரின்போது தேர்தல்களை நோக்கி நகரலாம் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

இதற்கிடையே போர்க்காலத்தில் தேர்தல்கள் நடத்துவது உக்ரைனிய சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

ஜெலென்ஸ்கியின் ஏற்பு விகிதம் பொதுவாக சுமார் 60 சதவீதமாக  நிலையாக உள்ளது, ஆனால் உக்ரேனியர்கள் அரசியலில் புதிய முகங்களை விரும்பினாலும், பலருக்கு இப்போது வாக்களிப்பதில் ஆர்வம் குறைவாகவே உள்ளது என்று கருத்துக் கணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆகஸ்ட் 5 அன்று கீவ் சர்வதேச சமூகவியல் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், 57 வீதமான  உக்ரேனியர்கள் சண்டை முடிந்த பின்னரே தேர்தல்களை நடத்த விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி