இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு: பிரதமரிடம் மகஜர் கையளிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினரால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினரால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமரை, நிகழ்வு நிறைவடைந்த பின்னர் வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போதே காணி விடுவிப்பு தொடர்பான மகஜர் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமது பூர்வீகக் காணிகளை இழந்துள்ள மக்கள், தங்களின் நிலங்களை மீட்பதற்காக நீண்டகாலமாக வீதி வீதியாகப் போராடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு (பலாலி, வசாவிளான், மயிலிட்டி), கிளிநொச்சி, முல்லைத்தீவு (கேப்பாப்பிலவு), மட்டக்களப்பு (மயிலத்தமடு, மாதவனை) உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த அரசுகளின் காலத்தில் இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், தற்போதைய புதிய அரசின் மீதும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். எனினும், காலங்கள் கடந்தும் முழுமையான மற்றும் நீதியான தீர்வு கிடைக்கமை ஆழ்ந்த கவலையை அளிப்பதாக அமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகாலப் போராட்டத்தையும் எதிர்பார்ப்புகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வை உடனடியாக வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை