ஐரோப்பா

சுவீடன் வாள்வெட்டுச் சம்பவம் – 18 வயதுடைய இளைஞர் கைது

சுவீடனின் ஃபாகர்ஸ்டாவில் Fagersta உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தாக்குதல்தாரி பிறரின் தூண்டுதல் இன்றி தனியாக செயற்பட்டதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அதிகாரிகள் பாதுகாப்பு கெமராக்களை தற்போது ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, இந்த வன்முறைக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய காவல்துறை பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்