தென்கொரியாவில் சிறை கைதிகளுக்கு குளிரூட்டும் (AC)வசதியை வழங்குவதற்கு எதிர்ப்பு!
தென்கொரியாவில் மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்தி சிறைக்கைதிகளுக்கு குளிரூட்டும் வசதியை வழங்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது,
சிறைகளில் குளிரூட்டும் அமைப்பை மேம்படுத்துவது என்பது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய கைதிகளையும் சீர்திருத்த அதிகாரிகளையும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு குறைந்தபட்ச நடவடிக்கையாகும் என்று அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
அத்துடன் இந்த திட்டத்திற்கு 1.2 பில்லியன் வோன் ($779,000) செலவாகும் என்று நீதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நியாயப்படுத்திப் பேசிய அமைச்சகம், குளிரூட்டிகள் சிறை அறைகளில் அல்லாமல் நடைபாதைகளில் நிறுவப்படும் என்றும், இது ஒரு மறைமுகமான குளிரூட்டும் முறையாகச் செயல்படும் என்றும் கூறியது.
“கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய கைதிகளின் உயிரையும் உடல் பாதுகாப்பையும் பாதுகாக்க எங்களால் செய்யக்கூடிய மிகக் குறைந்தபட்ச நடவடிக்கை இதுதான்” என்று அமைச்சகம் வாதிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த திட்டத்தின் ஊடாக பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




