செய்தி விளையாட்டு

FIFA World Cup 2026 – திருவிழா இன்று ஆரம்பம்!

  • June 11, 2026
  • 0 Comments

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன. உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இம்முறை 48 அணிகள் களமிறங்குகின்றன. மெக்சிக்கோவில் நடைபெறும் முதல் போட்டியில் மெக்சிக்கோ மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் துவக்க விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. உலக புகழ்பெற்ற பாடகி ஷகிராவின், உலககிண்ண தொடருக்கான இசை விருந்தும் இடம்பெறவுள்ளது. ஆரம்ப விழாவுக்கு 17 […]

இலங்கை செய்தி

குவைத்தில் போதைப்பொருட்களுடன் 03 இலங்கையர் கைது!

  • June 11, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பாக 03 இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட ஏழுபேர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத் பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு சோதனையின் போது இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் குழுவில் மூன்று இலங்கையர்கள், இரண்டு குவைத் குடிமக்கள், ஒரு இந்தியர் மற்றும் இரண்டு பிற வெளிநாட்டினர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஷிஷ், ஹெராயின் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது, சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், மேலதிக […]

இலங்கை செய்தி

இலஞ்சம் பெற்ற 32 அரச அதிகாரிகள் கைது!

  • June 11, 2026
  • 0 Comments

2026 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 04 மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 32 அரச அதிகாரிகள் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. மேற்படி காலப்பகுதியில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் 51 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில், இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 3,349 முறைப்பாடுகள் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!

  • June 11, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளாவிய வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதற்கமைய எண்ணெய் டாங்கிகள் மற்றும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து கடல்வழி போக்குவரத்துகளுக்கு இந்த நீர்வழிப்பாதையை பயன்படுத்த ஈரான் ராணுவம் தடை விதித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, இந்த எல்லையை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்படலாம் என ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தை இந்த அதிரடி […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் நடக்குமா?

  • June 11, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கும் எந்தவொரு முடிவையும் அரசாங்கம் எடுக்கவில்லை. அதேபோல ஜனநாயகம் என்ற போர்வையில் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட முடியாது என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறியவை வருமாறு , “நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் எல்லாம் சட்டத்தின் பிரகாரம் நிச்சயம் நடக்கும். எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் […]

அரசியல் இலங்கை செய்தி

60 நாட்களுக்குள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்!

  • June 11, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இரத்துச் செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று எதிரணிகளால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக, பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு முன்மொழியப்பட்டுள்ளது. அது ஆபத்தான பல பிரிவுகளை உள்ளடக்கியிருப்பதாக சட்ட நிபுணர்கள், மனித உரிமை அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

எனது உயிருக்கு அச்சுறுத்தல் – அர்ச்சுனா முழக்கம்!

  • June 10, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எனது உயிருக்கு  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்  சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது தொடர்பில் நான் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கூறி வருகின்றேன். ஆனால் அது தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.கவனம் செலுத்தப்படவில்லை. எனது […]

உலகம்

பாகிஸ்தானில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து!

  • June 10, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை அறிவிக்கவில்லை. பாகிஸ்தானின் காஷமீர் ஆக்கரமிப்பு பகுதியான முசாஃபராபாத் (Muzaffarabad) அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக இராணுவ பிரிவு வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் உள்ளூர் அரசாங்கம் ஒரு போராட்டக் குழுவிற்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, அதன் […]

உலகம்

எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!

  • June 10, 2026
  • 0 Comments

அமெரிக்க இராணுவம்  ஓமான் கடற்கரைக்கு அப்பால் எண்ணெய் கப்பல் ஒன்றை தாக்கும் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இன்று இந்த காணொளிகளை வெளியிட்டுள்ளது. நேற்று இரவு 11:14 மணிக்கு, ஈரானிலிருந்து எண்ணெயைக் கொண்டு செல்ல முயன்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக  மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்கப் படைகளின் அறிவுறுத்தல்களுக்குக் கப்பல் குழுவினர் மீண்டும் மீண்டும் இணங்கத் தவறியதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இராணுவத்தினர் விமானத்தில் இருந்து கப்பல் […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் பணவீக்கம் சாதனை அளவு உயர்வு – 03 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!

  • June 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த 03 ஆண்டுகளில் முதல் முறையாக 04 சதவீதத்தை கடந்துள்ளது. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்குவதற்கு முன்பு பதிவான 2.4 சதவீதத்தை விட, மே மாதத்தில் பணவீக்க விகிதம் 4.2 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. இந்த பணவீக்க அதிகரிப்புக்கு, கடுமையாக உயர்ந்துள்ள எரிசக்தி செலவுகளே முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் எரிசக்தி செலவுகள்  நுகர்வோர் பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இதனால் மக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து எரிவாயு […]