இலங்கை செய்தி

இலஞ்சம் பெற்ற 32 அரச அதிகாரிகள் கைது!

2026 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 04 மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 32 அரச அதிகாரிகள் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதியில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் 51 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில், இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 3,349 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 314 வழக்குகள், நீதிமன்றங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

 

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை