60 நாட்களுக்குள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்!
பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இரத்துச் செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிரணிகளால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக, பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு முன்மொழியப்பட்டுள்ளது.
அது ஆபத்தான பல பிரிவுகளை உள்ளடக்கியிருப்பதாக சட்ட நிபுணர்கள், மனித உரிமை அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




