இலங்கை செய்தி

குவைத்தில் போதைப்பொருட்களுடன் 03 இலங்கையர் கைது!

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பாக 03 இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட ஏழுபேர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குவைத் பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு சோதனையின் போது இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் குழுவில் மூன்று இலங்கையர்கள், இரண்டு குவைத் குடிமக்கள், ஒரு இந்தியர் மற்றும் இரண்டு பிற வெளிநாட்டினர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஷிஷ், ஹெராயின் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது,

சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், மேலதிக விசாரணைக்காக குவைத்தின் குற்றவியல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை