உலகம் செய்தி

மிரட்டல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ஈரான் பதிலடி!

  • June 10, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் அடிபணியோம் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இவ்வாறு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் Abolfazl Shekarchi , அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வலிமை தங்களுக்கு இருப்பதாக சூளுரைத்தார். ஈரானின் இறையாண்மைக்கு எதிராக விடுக்கப்படும் […]

உலகம் செய்தி

கடுமையான விலையை கொடுக்க நேரிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

  • June 10, 2026
  • 0 Comments

ஈரான் தனது செயல்களுக்குக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். “ஈரான் அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைக்குப் போதிய கால அவகாசம் எடுத்தும் உடன்படவில்லை. தற்போது அவர்கள் இதற்குரிய விலையைத் தந்துதான் ஆக வேண்டும். ஈரானிய ராணுவம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படையின் பெரும்பகுதி இப்போது இல்லவே இல்லை; அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஈரான் வெறும் பேச்சோடு சரி, செயலில் ஒன்றும் இல்லை” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். […]

ஐரோப்பா

பைசா கோபுரத்தைபோல சாய்ந்த தேவாலயம்!! நிதி திரட்டும் மக்கள்!

  • June 10, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் – லிங்கன்ஷயரில் உள்ள புனித ஜேம்ஸ் தேவாலயம், கடுமையான கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற பைசா கோபுரத்தைபோல இந்த தேவாலயத்தின் ஒருபகுதி வியத்தகு முறையில் சாய்ந்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை பாரம்பரியக் கட்டிடமாகப் பட்டியலிடப்பட்டுள்ள இதன் உட்புறம், அபாயகரமான தரைத்தளம், மரப்புழுப் பாதிப்பு மற்றும் விரிசல் விட்ட சுவர்களால் சேதமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலமை மோசமடைந்தால் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் காணப்படுவதால்,  அவசரகால பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகளை […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்!

  • June 10, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மேலும் 12 மனித என்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 21ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை (10) இடம்பெற்றன. இன்றைய அகழ்வின் போது 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 4 சிறுவர்களுடைய என்புக்கூடும் , 2 சிசுக்களின் என்புக்கூடுகள் உட்பட்ட 7 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதனடிப்படையில் செம்மணி மனித […]

உலகம்

அமெரிக்கர்களை பற்றிய எதிர்மறை விடயங்களை கோரிய ட்ரம்ப் நிர்வாகம்!!

  • June 10, 2026
  • 0 Comments

கடந்த காலத்திலோ அல்லது நிகழ்காலத்திலோ அமெரிக்கர்கள் பற்றி எதிர்மறையாக கருதும் விடயங்கள் தொடர்பில் (எந்தவொரு காட்சிப் பொருள்களையும் அல்லது கண்காட்சிகளையும்) தெரியப்படுத்துமாறு ட்ரம்ப் நிர்வாகம் பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களிடம் கோரியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். சுமார் 35000 மக்களின் கருத்துக்களை அசோசியேட்டட் பிரஸ் ஆய்வு செய்ததில், பெரும்பாலான மக்கள் இந்த முயற்சியை விமர்சித்துள்ளமை தெரியவந்துள்ளது. பதிலளித்தவர்களில் வடகரோலினாவை  சேர்ந்த நபர் ஒருவர், நிர்வாகத்தின் முயற்சிகளை “அமெரிக்கத் தன்மையற்றது” என்று குறிப்பிட்டார். மற்றொருவர், […]

அரசியல் இலங்கை செய்தி

படையினருக்காக நாம் களமிறங்குவோம்: நாமல் சூளுரை!

  • June 10, 2026
  • 0 Comments

” நாம் படையினருக்காக முன்னிலையாவோம். இதனை எவராலும் தடுக்க முடியாது. சுரேஷ் சலே தொடர்பான விசாரணையை அரசியல் மயப்படுத்த வேண்டாம்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு, “ பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இங்கு கதைக்கப்பட்டது. உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடலே, தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மேடையில் ஒலிக்கப்பட்டது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முகநூலில் அதனை […]

இலங்கை

திரைப்படப் பாணியில் போதைப்பொருள் கடத்தல் – சாரதி திடீர் மரணம்!

  • June 10, 2026
  • 0 Comments

வயிற்றுக்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்தின்  சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த போதைப்பொருள்  வயிற்றினுள்ளேயே வெடித்து விஷமாகியதால்  அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கைககள் தெரிவிக்கின்றன. ஓகவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்தள்ளது. கடந்த 8ஆம் திகதி மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற பேருந்து, அதன் இலக்கை அடைந்த சில நிமிடங்களிலேயே சாரதி திடீர் சுகவீனமுற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தங்காலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]

இந்தியா செய்தி

காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

  • June 10, 2026
  • 0 Comments

காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து தமிழக முதல்வர் விஜய் பேச்சு நடத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று டெல்லிக்கு புறப்பட்டார். முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்ததும் , காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் […]

ஐரோப்பா

மொஸ்கோவின் இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு – முக்கிய தலைவர் படுகொலை!!

  • June 10, 2026
  • 0 Comments

மொஸ்கோவின் பாலாஷிகாவில் (Balashikha)  நடந்த கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஏவுகணை மற்றும் பீரங்கிப் படைப் பிரிவின் தலைவர் டமிர் டேவிடோவ் (Damir Davydov)  கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் மொஸ்கோவின் வெவ்வேறு பககுதிகளில் இன்று இரண்டு கார்குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சமீபகாலமாக உக்ரைன் எல்லை பகுதிகளை தாண்டி மொஸ்கோவை குறிவைத்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக 21வது முறையாகத் தடைகளை விதிக்கும் […]

அரசியல் செய்தி

முடிவுக்கு வந்தது எதிரணியின் சத்தியாக்கிரகம்!

  • June 10, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்காக முன்னெடுக்கப்பட்டுவந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார் எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், சுரேஷ் சலேவுக்கு நீதி கோரியும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது. முன்னாள் அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, டிரான் அலஸ் மற்றும் சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் போராட்டத்தை […]