ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!
Ships and tankers in the Strait of Hormuz off the coast of Musandam, Oman, April 18, 2026. REUTERS
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளாவிய வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
இதற்கமைய எண்ணெய் டாங்கிகள் மற்றும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து கடல்வழி போக்குவரத்துகளுக்கு இந்த நீர்வழிப்பாதையை பயன்படுத்த ஈரான் ராணுவம் தடை விதித்துள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, இந்த எல்லையை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்படலாம் என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தை இந்த அதிரடி நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.





