உலகம் செய்தி

இஸ்ரேல் பிரதமர் சர்வாதிகாரி: துருக்கி ஜனாதிபதி சாட்டையடி!

  • June 11, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் ஒரு சர்வாதிகாரி என்று துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan சொற்கணை தொடுத்துள்ளார். இதற்கு பதிலடியாக எர்டோகனை யூத விரோதி என நெதன்யாகு விமர்சித்துள்ளார். லெபனான் மற்றும் சிரியாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று துருக்கி கருதுகிறது. இருப்பினும், தனது நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்காக எங்கு வேண்டுமானாலும் இராணுவத் தாக்குதல் நடத்தத் தயார் என இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகத் தொடரும் இந்த […]

உலகம்

தாக்குதல் அச்சம் : FIFA கால்பந்து தொடர் குறித்து FBI எச்சரிக்கை!

  • June 11, 2026
  • 0 Comments

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தும் பிஃபா கால்பந்து தொடர் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என FBI இயக்குனர் காஷ் படேல் தெரிவித்துள்ளார். 48 அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்தபோட்டியை காண உலகெங்கிலும் இருந்து சுமார் 03 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மிகப் பெரிய பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ட்ரோன்கள் மிக முக்கியமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி […]

ஐரோப்பா

பெல்ஃபாஸ்ட் வன்முறை : 12 பொலிஸார் மீது தாக்குதல்!!

  • June 11, 2026
  • 0 Comments

பெல்ஃபாஸ்டில்  இரண்டாவது நாளாக நேற்றைய தினமும்  வன்முறை சம்பவங்கள் தொடர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 12 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததுடன், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 24 வயதுடைய பெண் ஒருவர் மீது ஒழுங்கற்ற நடத்தை தொடர்பில் வடக்கு அயர்லாந்து பொலிஸார் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர். மேலும் 28 வயதுடைய ஆண் ஒருவர் மீது மாறுவேடத்தைக் களையத் தவறியது, காவல்துறையினருக்கு இடையூறு செய்தது மற்றும் காவல்துறையை எதிர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் […]

உலகம்

அல்பேனியாவில் இவான்கா ட்ரம்பிற்கு எதிராக பாரிய போராட்டம்!!

  • June 11, 2026
  • 0 Comments

அல்பேனியாவில் ஜாரெட் குஷ்னர்  மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் மகள் இவான்கா ட்ரம்பின் ஆடம்பர விடுதி திட்டத்திற்கு  எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் அணித்திரண்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நாட்டின் தெற்குக் கடற்கரையில் ஜாரெட் குஷ்னர் 5 பில்லியன் யூரோ மதிப்பிலான ஆடம்பர விடுதியை அமைக்க முன்மொழிந்துள்ளார். இந்த திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான அல்பேனியர்கள் டிரானாவில் ஒன்றுக்கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேற்படி திட்டம் வெளிப்படை தன்மையின்றி உள்ளதாகவும், அரிய வனவிலங்குகளின் தாயகமான ஸ்வெர்னெக்கிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். […]

இலங்கை செய்தி

யாழ். கலாசார மையம் குறித்து மாநகரசபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்!

  • June 11, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் கலாசார மையத்தை யாழ்ப்பாணம் மாநகர சபையின் முழுமையான பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்று யாழ். மாநகர சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று மேயர் வி.மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் கலாசார மையத்தின் தற்போதைய பராமரிப்பு விவகாரங்கள் குறித்துக் கடுமையான விவாதங்கள் இடம்பெற்ற நிலையிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. மாநகர சபையால் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “கடந்த 2014 ஆம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பொது பாதுகாப்பு அமைச்சர்  ஜான் ஹீலி  பதவி விலகினார்!

  • June 11, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பொது பாதுகாப்பு அமைச்சர்  ஜான் ஹீலி  இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதிகரித்த அச்சுறுத்தல் நிலவும் இக்காலத்தில் நாட்டைப் பாதுகாக்கத் தேவையான  வளங்களை ஒதுக்கத் தவறியமைக்காக பிரதமர் ஸ்டாமரை விமர்சித்துள்ளார். பிரித்தானிய மக்கள் மத்தியில் ஸ்டாமரின் மதிப்பு மற்றும் நம்பிக்கை சரிந்துள்ள நிலையில்,    ஜான் ஹீலியின் இராஜினாமா அரசாங்கத்திற்கு கூடுதல் இழப்பாக அமைந்துள்ளது. மேலும், செலவழிக்கப் பணம் இல்லாதபோது பாதுகாப்புச் செலவினங்களை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்ற அரசாங்கத்தின் மையத்திலிருக்கும் நெருக்கடியையும் இது […]

இலங்கை செய்தி

விஜய் ஈழத்து மருமகன்: வடக்கு மீனவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை!

  • June 11, 2026
  • 0 Comments

“தமிழக முதலமைச்சராக தற்போது பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம் ஈழத்து மீனவர்களாகிய நாம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். அவர் ஒரு ‘ஈழத்து மருமகன்’ என்ற ரீதியில், எமது வாழ்வாதாரப் பிரச்சினைக்கான தீர்வை அவரிடம் கேட்பதற்கு எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கின்றது.” – இவ்வாறு அகில இலங்கை மீனவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு […]

இலங்கை செய்தி

காணிகளை விடுவிக்கக் கோரி 15 ஆம் திகதி யாழில் போராட்டம்!

  • June 11, 2026
  • 0 Comments

வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்த கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், உயர் பாதுகாப்பு வலயங்களாக முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டம் குறித்து மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் ஊடகங்கள் மூலம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர். அந்த அறிவித்தலில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி எமது சொந்த […]

உலகம்

வரலாற்றில் இடம்பிடிக்கும் 2026 FIFA உலகக் கோப்பை தொடர்!

  • June 11, 2026
  • 0 Comments

உலகம் முழுவதும் 6 பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் FIFA உலகக் கோப்பை தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடர், இம்முறை பல தனித்துவமான நிகழ்வுகளை கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை தொடரின் சிறப்பம்சங்கள். வரலாற்றில் முதல் முறையாக, மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இதை நடத்துகின்றன. மேலும், உலகக் கோப்பையின் 96 ஆண்டு கால வரலாற்றில் முதல் […]

இலங்கை

‘கிஃபிர் சி12’ போர் விமானத்தின் சோதனையோட்டம் நிறைவு!

  • June 11, 2026
  • 0 Comments

மேம்படுத்தப்பட்ட முதல் ‘கிஃபிர் சி12’ போர் விமானம், கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இன்று (11) தனது சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது, விமானப்படையின் ‘கிஃபிர்’ போர் விமான நவீனமயமாக்கல் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ‘சிங்கக் குட்டி’ என்று அழைக்கப்படும் 10-வது போர் விமானப் படைப்பிரிவைச் சேர்ந்த இந்த போர் விமான நவீனமயமாக்கல் திட்டம், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும். ‘கிஃபிர் சி12’ விமானத்தில் நவீன […]