அல்பேனியாவில் இவான்கா ட்ரம்பிற்கு எதிராக பாரிய போராட்டம்!!
அல்பேனியாவில் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் மகள் இவான்கா ட்ரம்பின் ஆடம்பர விடுதி திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் அணித்திரண்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் தெற்குக் கடற்கரையில் ஜாரெட் குஷ்னர் 5 பில்லியன் யூரோ மதிப்பிலான ஆடம்பர விடுதியை அமைக்க முன்மொழிந்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான அல்பேனியர்கள் டிரானாவில் ஒன்றுக்கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேற்படி திட்டம் வெளிப்படை தன்மையின்றி உள்ளதாகவும், அரிய வனவிலங்குகளின் தாயகமான ஸ்வெர்னெக்கிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஈடுபாடு மற்றும் அல்பேனிய அரசாங்கத்திற்குள் பரவலாகக் காணப்படும் ஊழல் குறித்து போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பிரதமர் எடி ராமாவைக் (Edi Rama) விமர்சித்துள்ளனர்.
எவ்வாறாயினும் பொதுமக்களின் எதிர்ப்பு இருந்தாலும் இந்த திட்டம் தொடரும் என பிரதமர் எடி ராமா உறுதிப்பட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




