தாக்குதல் அச்சம் : FIFA கால்பந்து தொடர் குறித்து FBI எச்சரிக்கை!
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தும் பிஃபா கால்பந்து தொடர் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என FBI இயக்குனர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
48 அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்தபோட்டியை காண உலகெங்கிலும் இருந்து சுமார் 03 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மிகப் பெரிய பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரோன்கள் மிக முக்கியமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் அச்சுறுத்தல் தகவல்களை நிகழ்நேரத்தில் பரிமாறிக்கொள்வதை எளிதாக்கும் வகையில் 46 நாடுகளின் காவல்துறைப் பிரதிநிதிகளுடன் FBI ஒரு கூட்டுச் செயல்பாட்டு மையத்தை நிறுவியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்வதால் ஏற்படும் பாதுகாப்புச் சிக்கல்கள், மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பான அதிகரித்த அச்சுறுத்தல்கள், ஈரானின் போட்டிகளின் போது ஏற்படக்கூடிய வன்முறைப் போராட்டங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அபாயங்களை அவர் அடிகோடிட்டு காட்டியுள்ளார்.





