உலகம்

வெனிசுலா மீதான முற்றுகையை போல் ஈரானை தாக்க ட்ரம்ப் திட்டம்!

  • June 11, 2026
  • 0 Comments

அமெரிக்கா இன்று இரவே ஈரானை தாக்கி அதன் எண்ணெய் வளத்தை முழுமையாக கையகப்படுத்தும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அண்மைக் காலத்தில், நாங்கள் கார்க் தீவையும், பிற எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களையும் கைப்பற்றுவோம்” என்று கூறியுள்ளார். இது, வொஷிங்டன் வெனிசுலாவில் மேற்கொண்ட தாக்குதலைப் போலவே இருக்கும் என்றும், அது இரு நாடுகளுக்கும் ‘சிறப்பாகச் செயல்படுகிறது’ என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பெல்ஃபாஸ்ட் வன்முறை சம்பவம் – நாடுகடத்தும் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை!

  • June 11, 2026
  • 0 Comments

பெல்ஃபாஸ்டில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த குடியேற்ற எதிர்ப்பு கலவரங்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை பிரித்தானிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பெல்ஃபாஸ்டில் கத்திகுத்து கலவரத்திற்கு காரணமான   ஹாடி அலோடிட்,  செல்லுசெல்லுபடியாகும் விசா இல்லாமல் அயர்லாந்தில் இருந்து எல்லையை கடந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான எல்லை கடப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரத்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு புகலிடம் கோருவோர் ஐரோப்பிய […]

இலங்கை

உலக அமைதிக் குறியீட்டில் 14 இடங்கள் முன்னேறிய இலங்கை!

  • June 11, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேறி 67வது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (Institute for Economics and Peace), பாதுகாப்பு, சமூக நிலைத்தன்மை, மற்றும் நாடுகளுக்குள் நிலவும் உள் மற்றும் வெளி மோதல்களின் அளவுகள் உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்தக் குறியீட்டைத் தயாரிக்கிறது. இதற்கமைய இந்த ஆண்டில் உலக அமைதி குறிப்பிடத்தக்க வகையில் வீழ்ச்சிடையந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்  ஐஸ்லாந்து முதலிடத்திலும், நியூசிலாந்து […]

இந்தியா உலகம் செய்தி

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் பலி!

  • June 11, 2026
  • 0 Comments

Palau நாட்டுக் கொடியுடன் பயணித்த Settebello கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் Sarbananda Sonowal  இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணை கடல்வழிப் பாதையில் விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை மீறியதாகக் குற்றம் சாட்டி, புதன்கிழமையன்று அந்த எண்ணெய் கப்பலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடக்கத்தில் மூன்று இந்திய மாலுமிகளைக் காணவில்லை என்றும், 21 இந்தியப் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் […]

இலங்கை செய்தி

எல்-நினோ காலநிலையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆராய்வு!

  • June 11, 2026
  • 0 Comments

எல்-நினோ காலநிலையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார உற்பத்தி லங்கா தனியார் நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் […]

ஐரோப்பா செய்தி

ஈரான்மீது புதிய தடைகளை EU விதிக்க வேண்டும்: இத்தாலி வலியுறுத்து!

  • June 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க ஈரான் ஒத்துழைக்க மறுத்தால், அந்த நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டுமென இத்தாலி வலியுறுத்தியுள்ளது. ஈரான் தனது தவறான போக்கைத் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என இத்தாலியப் பிரதமர் Giorgia Meloni, நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். G& உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இத்தாலியின் வெளியுறவுக் கொள்கை குறித்த நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். மேலும், இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரின் […]

இந்தியா

ஒரு துளி தண்ணீர் கூட பாகிஸ்தானுக்குள் செல்லாது – இந்தியா உறுதி!

  • June 11, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான நதி பகிர்வு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டிற்கு தண்ணீர் வழங்குவதை தடுக்க இந்தியா செயற்பட்டு வருவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் காரணமாக 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து  பாகிஸ்தானுடனான  சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியது. இதற்கமைய “ஒரு துளி தண்ணீர் கூட” பாகிஸ்தானுக்குள் செல்லாது என்பதை உறுதிப்படுத்த புது டெல்லி செயல்பட்டு வருவதாக  மத்திய அமைச்சர் ஒருவர் கூறினார். மோடி இந்த […]

உலகம்

கியூபாவில் நாளாந்தம் மடியும் பிஞ்சு உயிர்கள்! அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை!

  • June 11, 2026
  • 0 Comments

கியூபாவில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கம்யூனிச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து தனக்கு அடிப்பணியவைக்கும் நோக்கில் அமெரிக்கா செயற்பட்டு வருகிறது. இதற்கமைய கியூபா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது மட்டுமல்லாமல் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். இது கியூப மக்களின் வாழ்வாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் (Bruno Rodriguez), “எரிபொருள் பற்றாக்குறையால், 6.3 மில்லியன் டொலர் (5.4 மில்லியன் யூரோ) […]

ஐரோப்பா செய்தி

வட்டி விகிதங்களை உயர்த்த ஐரோப்பிய மத்திய வங்கி திட்டம்!

  • June 11, 2026
  • 0 Comments

ஈரான் போரினால் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ள நிலையில், ஐரோப்பாவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட இரண்டு சதவீத இலக்கைத் தாண்டி தற்போது மூன்று சதவீதத்திற்கும் மேல் உள்ளதால், இந்த நிதி நிலை மாற்றம் அவசியமெனக் கருதப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தாலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும் விலைவாசி உயர்வைக் குறைக்கவும் வங்கி அதிகாரிகள் இந்த முடிவை எடுக்க உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் […]

உலகம்

குவைத் விமான நிலையம் மீளவும் திறக்கப்பட்டது!

  • June 11, 2026
  • 0 Comments

ஈரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடிப்பட்டிருந்த நிலையில் மீளவும் வழமைக்கு திரும்பியுள்ளது. இன்று அதிகாலை குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் கூறியிருந்தனர். இந்த தாக்குதல்களை தொடர்ந்து குவைத் அரசாங்கம் வான்வெளியை மூடியதுடன்,   விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து தற்போது வான்வெளி மீளவும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.