உலகம் செய்தி

இறங்க மறுக்கும் ஈரான்! நடக்கப்போவது என்ன?

  • June 12, 2026
  • 0 Comments

ஈரான் தனது நாட்டின் மீதான தாக்குதல்களைத் தடுக்க பாதுகாப்பு உத்தரவாதத்தையும், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்க பொருளாதாரத் தடைகளை நீக்குவதையும் முதன்மையாகக் கோரியுள்ளது எனத் தெரியவருகின்றது. எனினும், இஸ்ரேலின் நிலைப்பாட்டை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் இத்தகைய பாதுகாப்பு உறுதிமொழிகளை வழங்குவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, அமெரிக்க-இஸ்ரேல் மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஈரான், உடனடி நிதி நிவாரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. பாதுகாப்பு உத்தரவாதம், தடை நீக்கம் உள்ளிட்டவை ஏற்கப்படாவிடின், எந்தவொரு சமரசத்தையும் ஈரான் ஏற்காது என்பது உறுதி. இது […]

செய்தி விளையாட்டு

முதல் ஆட்டத்திலேயே 3 சிவப்பு அட்டைகள்!

  • June 12, 2026
  • 0 Comments

மெக்சிகோ சிட்டியின் அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. மெக்சிகோ அணி தனது உலகக் கோப்பை வரலாற்றுத் தொடக்க ஆட்டங்களில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ஜூலியன் குயினோன்ஸ் மற்றும் ரவுல் ஜிமெனெஸ் ஆகியோர் கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த ஆட்டத்தில் இரு அணிகளையும் சேர்த்து மொத்தம் மூன்று சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. […]

இலங்கை செய்தி

தமிழர் தாயகத்தில் காணி ஆக்கிரமிப்பு: ஐரோப்பாவில் முறைப்பாடு!

  • June 12, 2026
  • 0 Comments

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் நேரில் முறையிட்டுள்ளார். ஐரோப்பிய வெளிநாட்டு நடவடிக்கை சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவரான சார்ல்ஸ் வைட்லியை, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் சொல்லிசைப் பாடகரான கணேஷ்குமார் சங்கீத்ஷன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து […]

இலங்கை செய்தி

தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்: பதறவைக்கும் செம்மணி!

  • June 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது ஒரு சிறுவரின் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்பட 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 341ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 22ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. நேற்றைய அகழ்வின் போது புதிதாக 2 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. […]

உலகம்

ஒப்பந்தத்தை எட்டும் தருணம் : திகதி பின்னர் அறிவிக்கப்படும்!!

  • June 11, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக இன்று திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை இரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். மேற்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நேரமும் இடமும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய செய்தி வெனிசுலா மீதான முற்றுகையை போல் ஈரானை தாக்க ட்ரம்ப் திட்டம்!      

ஐரோப்பா

நெதர்லாந்தில் குழந்தைகளுக்கு எமனாக வந்த கார்!

  • June 11, 2026
  • 0 Comments

நெதர்லாந்தில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற குழந்தைகள் மீது கார் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று பெல்ஜிய எல்லைக்கு அருகிலுள்ள வோகல்வார்டே  (Vogelwaarde) கிராமத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது, இதில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 04 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும்  நெதர்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் விபத்து குறித்த மேலதிக தகவல்கள்  விசாரணையின் பின் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

உலகம்

“முடிவற்ற சகதியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” : அமெரிக்காவை எச்சரித்த ஈரான்!

  • June 11, 2026
  • 0 Comments

ரான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்கா முடிவற்ற சகதியில் சிக்கிக் கொள்ளும் என ஈரானின்    நாடாளுமன்ற சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் (Mohammad-Bagher Ghalibaf) எச்சரிக்கை விடுத்துள்ளார். “தவறான உத்திகளும், அவசர முடிவுகளும் ஒட்டுமொத்த சூழலையும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்றும் எரிசக்தி உள்கட்டமைப்பையும் சந்தைகளையும் சிதைத்து, நீங்கள் பல ஆண்டுகளாகச் சிக்கிக்கொள்ளும் ஒரு முடிவற்ற சகதியை உருவாக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “நீங்கள் ஒரு மாறுபட்ட ஈரானைக் காண்பீர்கள்,” என்றும் அவர் மேலும் கூறினார். […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

வட அயர்லாந்துக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் நிறுத்தம்!

  • June 11, 2026
  • 0 Comments

வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. வட அயர்லாந்தின் டிரான்ஸ்லிங்க்  (Translink ) நிறுவனம் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்று மாலை 5.30 மணிக்கு மேல் பெல்ஃபாஸ்டிலிருந்து இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை,  Ulsterbus   அல்லது கிளைடர் (Glider) சேவைகள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில் நிலையத்தில் (Grand Central Station)  இருந்து இயக்கப்படும்கடைசி ரயில் சேவைகள் இரவு 8.15 மணிக்கு அல்லது அதற்கு […]

ஐரோப்பா

ஆப்கானியர்களை நாடு கடத்தும் தீர்மானம் : இழுபறியில் பேச்சுவார்த்தை!

  • June 11, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10 இலட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த  தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்காத போதிலும், சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், நாடு கடத்துவதை அதிகரிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், ஐரோப்பிய ஆணையம் தலிபான் அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புரூனர் , […]

உலகம் செய்தி

உலகப் பொருளாதாரத்தை மிரட்டும் மத்திய கிழக்கு போர்!

  • June 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை உலக வங்கி குறைத்துள்ளது. எரிசக்தி விநியோகத்தில் கடுமையான தடைகள் ஏற்பட்டால், இந்த வளர்ச்சி விகிதம் 1.3 சதவீதமாகக் குறையக்கூடும் என்றும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, போரின் தாக்கத்தால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈராக் போன்ற எரிசக்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. ஜனவரி மாதக் கணிப்புகளுடன் ஒப்பிடுகையில், தற்போது மூன்றில் […]