ஐரோப்பா

பிரித்தானிய மக்களின் மனநிலை மாற்றம் : மீண்டும் சூடுபிடித்த விவாதம்!

  • June 12, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் அரைவாசி மக்கள் பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பை ஆதரிப்பார்கள் என கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பிரெக்ஸிட் மீதான பொதுமக்களின் மனநிலை கணிசமாக மோசமடைந்துள்ளது. 2021-ல் 27 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கணிக்கப்பட்டதை விட மோசமாகச் செல்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றார்கள். இது மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதற்கான விருப்பத்தை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் பரபரப்பு: பிக்குகளை நாடும் எதிரணி!

  • June 12, 2026
  • 0 Comments

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது. கூட்டு எதிரணியின் விசேட கூட்டமொன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியையும் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு கூட்டு எதிரணி திட்டமிட்டுள்ளது. “ சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கும் நிலைப்பாட்டிலேயே இந்த அரசாங்கம் இருக்கின்றது. இதனால் எமது மக்களுக்கு ஏற்படும் நெருக்கடி தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்படும்.” என்று கூட்டு எதிரணி […]

ஆஸ்திரேலியா செய்தி விளையாட்டு

25 வயதில் முடிந்த வாழ்க்கை!

  • June 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, மெல்போர்னைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை Jemma Stapleton , தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில் தாய்லாந்தில் காலமானார். புகழ்பெற்ற Stawell Gift ஓட்டப்பந்தயத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இவர், தனது குடும்பத்தினருடன் Koh Samui தீவில் சுற்றுலா சென்றிருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது. அவரது மறைவுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு அவரது குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. ஜெம்மாவின் சகோதரர் மற்றும் வாழ்க்கைத் […]

செய்தி விளையாட்டு

தென்கொரியாவின் கனவு வெற்றி நனவானது!

  • June 12, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடரில் தென் கொரியா மற்றும் செக் குடியரசு அணிகள் மோதிய விறுவிறுப்பான போட்டியில் தென்கொரியா அணி வெற்றிபெற்றுள்ளது. ஆட்டத்தின் பெரும்பகுதியை தென் கொரியா கட்டுப்படுத்தினாலும், செக் குடியரசு அணி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. எனினும், ஹ்வாங் இன்-பியோமின் சிறப்பான ஆட்டத்தால் தென் கொரியா விரைவாகப் பதிலடி கொடுத்து சமநிலையை எட்டியது. இறுதியில் மாற்று வீரராக வந்த ஓ ஹியோன்-க்யு ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்து தனது […]

ஐரோப்பா

50 இராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் : ரஷ்யாவை நடுங்கவைக்கும் உக்ரைன்!

  • June 12, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் 50 இராணுவ வாகனங்களை அழித்து அதனை மீண்டும் பயன்படுத்த முடியாததாக மாற்றியுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. கிரிமியாவை உக்ரைன் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் முக்கிய பாதையான அர்மியான்ஸ்க் (Armiansk) பாலத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்யாவின் அணுகலை முழுமையாகத் துண்டிக்கும் திறன் உக்ரைனுக்கு உள்ளது என்று  உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் ஏற்கனவே முக்கிய விநியோகப் பாதைகளில் போக்குவரத்தை கணிசமாகக் குறைத்துள்ளன. இதற்கிடையே கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளில் […]

ஐரோப்பா

டான் ஜார்விஸ் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமனம்!

  • June 12, 2026
  • 0 Comments

இராணுவ நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில் ஜான் ஹீலி பதவி விலகியதைத் தொடர்ந்து டான் ஜார்விஸ் (Dan Jarvis ) பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பிரதமர் ஸ்டாமர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், பிரிட்டிஷ் மக்களைப் பாதுகாப்பதே எனது முதன்மையான கடமையாகும், மேலும் நமது தேசியப் பாதுகாப்பைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் நான் எப்போதும் செய்வேன் என்று கூறியுள்ளார். நமது நாடு எதிர்கொள்ளும் பெருகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில், டான் ஜார்விஸை பாதுகாப்புச் செயலாளராக நியமிப்பதில் நான் […]

செய்தி விளையாட்டு

இறுதி ஓவர்வரை பரபரப்பு: வீழ்ந்தது இலங்கை!

  • June 12, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 போட்டியில், கடைசி ஓவரில் Rovman Powell அடித்த சிக்ஸர் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி தரப்பில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 51 ஓட்டங்ளையும் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் சேர்த்தனர் . மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவின் உண்ணாவிரத நாடகம்!

  • June 12, 2026
  • 0 Comments

“நீங்கள் குற்றமற்றவர் எனில் நீதிமன்றம் ஊடாக அதனை நிரூபித்துக்காட்டுங்கள். மாறாக உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபட்டு பயன் இல்லை.” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சுரேஷ் சலேவிடம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கூறியவை வருமாறு, “ சஹ்ரான் குழுவினருக்கு எவரேனும் உதவி இருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். […]

இலங்கை

நடுவானில் மின்னல் தாக்கம் : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

  • June 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மின்னல் தாக்கியதன் காரணமாக விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தின் என்ஜின்களில் ஒன்றான UL 606 மீது மின்னல் தாக்கியதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பயணிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்குச் செல்லும் மற்றொரு விமானத்திற்கு மாற்றப்பட்டனர். இதனால் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. […]

செய்தி விளையாட்டு

சிங்கப் பெண்களுக்கான களம்: சமர் இன்று ஆரம்பம்!

  • June 12, 2026
  • 0 Comments

ICC மகளிர் உலகக்கிண்ண T – 20 தொடர் இன்று இங்கிலாந்தில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. முதல் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு இப்போட்டி பெர்மிங்காமில் உள்ள எக்பாஸ்டன் மைதானத்தில் ஆரம்பமாகும். மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றது. இதுவரை 9 முறை நடந்துள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடைசியாக […]