50 இராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் : ரஷ்யாவை நடுங்கவைக்கும் உக்ரைன்!
ரஷ்யாவின் 50 இராணுவ வாகனங்களை அழித்து அதனை மீண்டும் பயன்படுத்த முடியாததாக மாற்றியுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
கிரிமியாவை உக்ரைன் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் முக்கிய பாதையான அர்மியான்ஸ்க் (Armiansk) பாலத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்யாவின் அணுகலை முழுமையாகத் துண்டிக்கும் திறன் உக்ரைனுக்கு உள்ளது என்று உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் ஏற்கனவே முக்கிய விநியோகப் பாதைகளில் போக்குவரத்தை கணிசமாகக் குறைத்துள்ளன.
இதற்கிடையே கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளில் இரண்டு புதிய குடியிருப்புகளைக் கைப்பற்றியதாக ரஷ்யா கூறியுள்ளது.




