அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவின் உண்ணாவிரத நாடகம்!

“நீங்கள் குற்றமற்றவர் எனில் நீதிமன்றம் ஊடாக அதனை நிரூபித்துக்காட்டுங்கள். மாறாக உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபட்டு பயன் இல்லை.” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சுரேஷ் சலேவிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கூறியவை வருமாறு,

“ சஹ்ரான் குழுவினருக்கு எவரேனும் உதவி இருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை தொடரவேண்டும். சூத்திரதாரிகள் யாரென்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். உரிய வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தான் குற்றமற்றவர் எனில் சுரேஷ் சலே அஞ்சவேண்டியதில்லை. நீதிமன்றத்துக்கு சென்று தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இதைத்தான் அவர் செய்ய வேண்டும். அதனைவிடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது பயனற்ற விடயமாகும்.

சுரேஷ் சலே, புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்தபோது ரிஷாட் பதியுதீன் உட்பட சிலரை கைது செய்து, அவர்கள்தான் சூத்திரதாரியெனன் கூறமுயன்றார்.

அவர்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை. நீதிமன்றம்சென்று, சட்டத்தர ணிகள் ஊடாக தாம் குற்றம் அற்றவர்கள் என்பதை நிரூபித்தனர்.” – என்றார்முஜிபூர் ரஹ்மான்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை