செய்தி விளையாட்டு

இறுதி ஓவர்வரை பரபரப்பு: வீழ்ந்தது இலங்கை!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 போட்டியில், கடைசி ஓவரில் Rovman Powell அடித்த சிக்ஸர் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி தரப்பில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 51 ஓட்டங்ளையும் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் சேர்த்தனர் .

மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷமார் ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

148 ரன்கள் ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் 6 ஓவர்களில் (Powerplay) அதிரடியாக 66 ஓட்டங்களைக் குவித்த போதிலும், அதன்பின்னர் ஓட்ட வேகம் கணிசமாகக் குறைந்தது.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி கட்டத்தில் வெற்றிக்கு 20 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பின்னர் அது 9 பந்துகளில் 9 ரன்கள் என்ற நிலைக்கு மாறியது.

எனினும், இறுதி ஓவரில் கேப்டன் ரோவ்மன் பவல் அடித்த சிக்ஸர் மூலம், இன்னும் 4 பந்துகள் மீதமிருக்கையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற மழையினால் பாதிக்கப்பட்ட மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

அந்தத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், கடைசி இரண்டு போட்டிகளும் மழையினால் கைவிடப்பட்டன.

தற்போது டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், எஞ்சிய இரண்டு டி20 போட்டிகளும் முறையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் (Sabina Park) மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி