உலகம் செய்தி

உக்ரைன்மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்: 14 பேர் பலி!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பொரிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தலைநகர் கிவ் மற்றும் டினிப்ரோ ஆகிய நகரங்களில் உள்ள குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் முன்னதாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியதுடன், மக்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார். […]

உலகம்

ஜப்பானில் மின்விநியோகம் துண்டிப்பு : 9 பேர் பலி!

  • June 2, 2026
  • 0 Comments

ஜப்பானை தாக்கிய ஜாங்மி (Jangmi ) புயல் காரணமாக 09 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் புயல் காரணமாக, கியூஷுவில் (Kyushu) உள்ள மியாசாகி (Miyazaki) நகரில்  கிட்டத்தட்ட 400,000 குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ஒகினாவாவைத் தாக்கிய குறித்த புயல் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் பரவலான மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் […]

செய்தி பொழுதுபோக்கு

இசைஞானிக்கு வாழ்த்து மழை…..!

  • June 2, 2026
  • 0 Comments

கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் இசையாய் வாழ்பவரான இசைஞானி இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு எக்ஸ் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #HappyBirthdayIlaiyaraaja, #இசைஞானி போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்கள், பின்னணி இசைக்கோர்ப்புகள் மற்றும் அரிய புகைப்படங்களைப் பகிர்ந்து தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் இசையில் பாடிய பாடகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் […]

உலகம்

ஜார்ஜியாவில் சோகம் : திருமணம் முடிந்த கையோடு மணமகன் உயிரிழப்பு!

  • June 2, 2026
  • 0 Comments

ஜார்ஜியாவின் கிராமப்புறத்தில், புதுமணத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மணமகன் உயிரிழந்துள்ளதுடன், மணமகள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஜார்ஜியாவின் டாசன் கவுண்டியில் (Dawson County) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், 25 வயதான மணமகன் டேவ் ஃபிஜியும், பெயர் குறிப்பிடப்படாத விமானியும் உயிரிழந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பிரெஸ்டீஜ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியது. இது […]

செய்தி விளையாட்டு

ஆஸியை வீழ்த்தி தொடரை வெல்லுமா பாகிஸ்தான்?

  • June 2, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் ODI கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. லாகூரில் பாகிஸ்தான் நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா […]

இலங்கை செய்தி

” தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தவே விலை உயர்வு”

  • June 2, 2026
  • 0 Comments

“தடையின்றி எரிபொருளை விநியோகிப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். விலைகுறைப்பை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை செய்வோம்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “உலக சந்தையில் எண்ணெய் விலை உச்ச மட்டத்தில் காணப்படுகின்றது. கடந்த முறையும் இந்நிலைமையே காணப்பட்டது. ஆனால் அரசாங்கம் மற்றும் நிறுவனங்கள் ஒரு தொகையை தாங்கிக்கொண்டே சிறு அளவில் அதிகரிப்பை மேற்கொண்டன. உலக அளவில் பிரச்சினை காணப்படுகின்றது. […]

ஐரோப்பா செய்தி

UK குடியேற்ற விதிகளில் மாற்றம் : சார்பு விசாவில் தங்கியிருப்போருக்கு சிக்கல்!

  • June 2, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் குடியேற்ற விதிகளில்  புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய பிரித்தானியாவில் பெற்றோர்கள் சட்டப்பூர்வ அனுமதி கொண்டிருந்தாலும், அவர்களின் பிள்ளைகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் 05 குழந்தைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆறாவதாக, கணவருடன் வசித்து வரும் கர்பிணிப் பெண் ஒருவருக்கும் வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி குழந்தைகளின் பெற்றோர் பிரித்தானியாவில் பராமரிப்பு பணியாளர் விசாவின் கீழ் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விதிகளின் கீழ் இலங்கை குடும்பம் […]

இலங்கை செய்தி

வடக்குக்காக இந்தியா வழங்கிவரும் உதவித் திட்டங்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவிப்பு!

  • June 2, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், மேலும் பல திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன. இதற்காக இந்தியாவுக்கு வடக்கு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசாங்கத்தின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு இன்று […]

உலகம் செய்தி

ட்ரம்பின் உத்தரவையடுத்து தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்!

  • June 2, 2026
  • 0 Comments

லெபனானின் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தவிருந்த தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடுத்து நிறுத்தியுள்ளார் என தெரியவருகின்றது. இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது, டிரம்ப் தனது அதிருப்தியை வெளியிட்டு, தாக்குதலை நிறுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இஸ்ரேலின் செயல்பாடுகளால் உலகளவில் எதிர்ப்பு கிளம்புவதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். டிரம்ப் மிகவும் கோபமாகப் பேசியதால், திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், ஹிஸ்புல்லா அமைப்பின் […]

உலகம் செய்தி

பிஜி நாட்டில் இஸ்ரேல் தூதரகம் திறப்பு: பாலஸ்தீன ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

  • June 2, 2026
  • 0 Comments

பிஜி நாட்டின் தலைநகரான சுவாவில் புதிய இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிஜி பிரதமர் Sitiveni Rabuka மற்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் Gideon Saar ஆகியோர் பங்கேற்று இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவை உறுதிப்படுத்தினர். இரு நாடுகளும் விவிலிய அடிப்படையிலான ஆழமான நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்வதாகக் குறிப்பிட்ட இஸ்ரேல், பிஜியை ஒரு உண்மையான நண்பனாக போற்றியுள்ளது. இருப்பினும், பாலஸ்தீன ஆதரவுக் குழுக்கள் இந்தத் தூதரகத் திறப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு, இது இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குத் […]