ஜப்பானில் மின்விநியோகம் துண்டிப்பு : 9 பேர் பலி!
ஜப்பானை தாக்கிய ஜாங்மி (Jangmi ) புயல் காரணமாக 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் புயல் காரணமாக, கியூஷுவில் (Kyushu) உள்ள மியாசாகி (Miyazaki) நகரில் கிட்டத்தட்ட 400,000 குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஒகினாவாவைத் தாக்கிய குறித்த புயல் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பல பகுதிகளில் பரவலான மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் என்றும முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுமார் 600 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




