செய்தி விளையாட்டு

ஆஸியை வீழ்த்தி தொடரை வெல்லுமா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் ODI கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.

லாகூரில் பாகிஸ்தான் நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 200 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், முதல் வெற்றியைப் பதிவு செய்து தொடரை சமன் செய்யும் போராட்டத்துடன் ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!