செய்தி பொழுதுபோக்கு

இசைஞானிக்கு வாழ்த்து மழை…..!

கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் இசையாய் வாழ்பவரான இசைஞானி இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு எக்ஸ் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #HappyBirthdayIlaiyaraaja, #இசைஞானி போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்கள், பின்னணி இசைக்கோர்ப்புகள் மற்றும் அரிய புகைப்படங்களைப் பகிர்ந்து தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜாவின் இசையில் பாடிய பாடகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் இளையதலைமுறை இசையமைப்பாளர்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் நெஞ்சங்களை தனது இசையினால் ஆளுகை செய்து வரும் இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி