ஆஸ்திரேலியா உலகம் செய்தி

28 மில்லியனை தாண்டியது ஆஸ்திரேலிய மக்கள் தொகை!

  • June 2, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை தற்போது 28 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சியில் 73 சதவீத பங்களிப்பு வெளிநாட்டு குடியேற்றங்கள் மூலம் கிடைத்துள்ள நிலையில், இயற்கை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் எதிர்கால பாதுகாப்பின்மை காரணமாக ஆஸ்திரேலியப் பெண்கள் மத்தியில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கு ஆஸ்திரேலியா மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது, ஆனால் ஒட்டுமொத்த வளர்ச்சி […]

செய்தி விளையாட்டு

“3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதே இலக்கு”

  • June 2, 2026
  • 0 Comments

“3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது எப்படி என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.” – என்று ஆர்சிபி அணி தலைவர் ரஜத் பட்டிதார் தெரிவித்தார். இறுதிப் போட்டிக்கு பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ கடந்த ஆண்டு எங்களுக்கு மிகப்பெரிய அழுத்தம் இருந்தது. ஆனால் இம்முறை தொடர் முழுவதும் நாங்கள் விளையாடிய விதம் காரணமாக, நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தது. இந்த ஆண்டு நாங்கள் சாதாரணமாக விளையாடவில்லை, ஒட்டுமொத்த தொடரையும் எங்களது ஆதிக்கத்தின் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

பாஜகவில் இருந்து விலகுகிறார் அண்ணாமலை?

  • June 2, 2026
  • 0 Comments

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றமை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அண்ணாமலை, அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், தமிழகம் முழுவதும் பாஜக வளர்வதற்கு முக்கிய பங்காற்றினார். இதனால், இளைஞர்களின் […]

இலங்கை

யாழில் வீடு புகுந்து கொள்ளையடித்த சிறுவர்கள் : ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மாயம்!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், குறித்த இருவரும் வீட்டின் புகைக்கூட்டின் வழியாக உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அத்துடன் பணத்தை பார்த்தவுடன், நெடுங்கேணியில் […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியலில் இருந்து ஒதுங்குவேன்: கம்மன்பில பரபரப்பு அறிவிப்பு!

  • June 2, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஒரு சபையையேனும் கைப்பற்றினால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்.” – என்று சவால் விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மேல் மற்றும் வடமத்திய மாகாணசபைகளில் மட்டுமே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் ஆளுங்கட்சியினரின் சொத்து […]

உலகம்

தைவானில் இராணுவ விமானம் விபத்து : இருவர் பலி!

  • June 2, 2026
  • 0 Comments

இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த தைவானிய விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளதாக  பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டின் தெற்குத் துறைமுக நகரமான காவோசியுங்கில் (Kaohsiung)உள்ள காங்ஷான் (Gangshan) விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையில் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெப்டினன்ட்-கர்னல்கள் லூ மற்றும் குவோ என அடையாளம் காணப்பட்ட இரு விமானிகளே மேற்படி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை விசாரிக்க விமானப்படை ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.  

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மேற்குகரை வன்முறை: இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியா தடை!

  • June 2, 2026
  • 0 Comments

பாலஸ்தீனப் பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிரொலியாக, மேற்கு கரையில் (West Bank) உள்ள இஸ்ரேலிய குடியேற்ற விவசாய புறக்காவல் நிலையங்கள் (farming outposts) மீது ஆஸ்திரேலியா முதன்முறையாக தடைகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நான்கு பண்ணை புறக்காவல் நிலையங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது ராஜதந்திர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சொத்துக்களை அழித்தல் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் போன்ற செயல்களைச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று […]

இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 263 எலும்புக்கூடுகள் அடையாளம்!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள் ஒன்று கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 263ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றன. இதன்போது, புதிதாக என்புத்தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது. மேலதிகமாக மேலும் மூன்று மனித என்புத்தொகுதிகள் […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: மயான எரிதகன மேடையின் அத்திவாரம் இடிந்து வீழ்ந்தது!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின்போது எரிதகன மேடைக்கு அருகில் பல மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் புதைகுழியானது எரிதகன மேடையின் அத்திவாரம் வரை நீண்டு சென்றிருந்த நிலையிலேயே, தற்போது அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இது தொடர்பில் செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் […]

உலகம்

ஹிஸ்புல்லா – இஸ்ரேலிய தலைவர்களுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை!! மத்தியஸ்தத்திற்கான கதவு திறப்பு!

  • June 2, 2026
  • 0 Comments

லெபனானில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக அமெரிக்காவுடனான மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளை ஈரான் நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து அதிரித்த பதற்றங்களை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், லெபனானுக்கு இஸ்ரேலிய படைகள் செல்லாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், எந்த இஸ்ரேலியப் படைகளும் பெய்ரூட்டிற்குச் செல்லாது, மேலும் அவர்கள் செல்லும் வழியில் உள்ள படைகள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன” என்று  தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாவிற்கிடையே […]