ட்ரோனுடன் மோத இருந்த விமானம் – மயிரிழையில் தப்பிய பயணிகள்
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ட்ரோன் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது.
போயிங் 737 என்ற விமானம் நியூவர்க் லிபர்ட்டி (Newark Liberty) சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ட்ரோன் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
விமானம் தரையிறங்கும்போது சுமார் 106 பயணிகள் மற்றும் 05 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விபரித்த விமானி, தங்கள் விமானத்திற்குக் கீழே சுமார் 100 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த, ஏறத்தாழ மூன்று அடி அகலமுள்ள வட்ட வடிவ ட்ரோன் மீது மோதவிருந்ததாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் விமான நிலையங்களில் ட்ரோன்களின் ஊடுருவல் அதிகரித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.




