உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘ஈரான் என்ற நாடே இருக்காது’ – எச்சரிக்கை முழக்கத்துடன் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டு சில நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

நான்கு மாத கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பிற்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை, மற்ற தரப்பு மீறிவிட்டதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தனது சமூக ஊடகப் பக்கத்தில்,

“நாம் நியாயமாக நடந்துகொள்ள முடியாத ஒரு கட்டம் வரலாம். நாம் வெற்றிகரமாகத் தொடங்கிய ராணுவ நடவடிக்கையை முழுமையாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அப்படி நடந்தால், ஈரான் இஸ்லாமியக் குடியரசு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும்.” என்று எச்சரித்துள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை பனாமா நாட்டுக்கொடியுடன் சென்ற எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல் (Tanker) மீது ஈரான் ட்ரோன் (Drone) தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) புதிய தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் அரசு ஊடகமான IRIB, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் உள்ள சிரிக் (Sirik) பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளது.

“ஈரானுக்கு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் அவர்கள் அதைத் தேர்ந்தெடுக்கவில்லை” என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் கூறியுள்ளது.

வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தொடர் அக்கிரமிப்புக்கு நேரடிப் பதிலாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஈரானின் ராணுவக் கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வான் பாதுகாப்பு, ட்ரோன் சேமிப்பு மற்றும் கண்ணிவெடி வைக்கும் வசதிகளை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவின் UKMTO கடல்சார் பாதுகாப்பு நிறுவனம், சனிக்கிழமை தாக்கப்பட்ட கப்பலின் கட்டுப்பாட்டு அறை (Bridge) சேதமடைந்ததாகவும், மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஈரான் இந்தத் தாக்குதல்கள் குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால், தங்களின் அனுமதியின்றி பயணித்த கப்பல்களை நோக்கி புரட்சிகர காவல் படையினர் (Revolutionary Guards) “எச்சரிக்கை சுடர்களை” ஏவியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இதனால் மற்ற கப்பல்கள் இப்போது நீரிணையைக் கடக்க ஈரானிடம் அனுமதி கோரி வருகின்றன.

அமெரிக்காவுடன் தொடர்புடைய ராணுவ இலக்குகள் மீது தாங்கள் “தற்காப்பு” தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி