அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிப்பு
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய மக்களைச் சென்றடைய தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருவதாக மாகாண ஆளுனர் ஆண்டி பெஷியர் தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ளம் ஏற்கனவே உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், வாகனம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்த அவர், இறப்பு தொடர்பான சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை என்றார்.




