இலங்கை செய்தி

IMF இன் 5 ஆவது, 6 ஆவது மதிப்பாய்வுகள் மே 27 இல்

  • May 17, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி மதிப்பீட்டிற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இந்தக் கூட்டத்தின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாட்டின் நிதிச் சீர்திருத்தத் திட்டத்தின் வெற்றி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு ஆராயவுள்ளது. இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிதி முகாமை மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் இதில் பிரதானமாக மதிப்பிடப்படும் என கூறப்படுகிறது […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியர்களிடம் ஜனாதிபதி முன் வைத்துள்ள உருக்கமான கோரிக்கை!

  • May 17, 2026
  • 0 Comments

ஜெர்மனியர்கள் அமெரிக்காவில் கல்வி கற்பதையோ, அல்லது பணிப்புரிவதையோ தவிர்க்க வேண்டும் என்று ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மெர்ஸின்  இந்தக் கருத்துக்கள்  அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதட்டங்களை எடுத்துக்காட்டுகின்றன. சர்வதேச விடயங்கள் பற்றி கருத்து வெளியிட்ட அவர் உலகின் நிலையைப் பற்றி மக்கள் “பேரழிவு மனநிலையில்” சிந்திக்கும் போக்கைக் கொண்டிருப்பதாகவும், ஜெர்மானியர்கள் தங்கள் சொந்த நாட்டின் திறனைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “உலகில் ஜெர்மனியைப் […]

இலங்கை செய்தி

மேல் மாகாண ஆளுநர் பதவி விலக தீர்மானம்

  • May 17, 2026
  • 0 Comments

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இன்று (17) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயத்தை அறிவித்துள்ளார். ஆளுநர் என்ற பொதுப் பதவியின் பொறுப்புகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக பணியாற்றுவதற்கான கூடுதல் பொறுப்புகள் மற்றும் தமது குடும்ப கடமைகள் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதில் உள்ள அதிகரித்து வரும் சவால்களைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். […]

உலகம்

ட்ரம்பின் அச்சுறுத்தல் – ஆர்ட்டிக் பகுதியில் களமிறங்கிய ரேஞ்சர்ஸ் பிரிவு!

  • May 17, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர் அச்சுறுத்தல் விடுத்துவரு் நிலையில், அத்தீவின் அதிகாரிகள் கனடாவிடம் உதவி கோரியுள்ளனர். இந்நிலையில் ‘ரேஞ்சர்ஸ்’ என்று அழைக்கப்படும் கனடிய ஆயுதப் படைகளின் ஒரு காப்புப் பிரிவு, ஆர்டிக் பகுதியில் நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, டென்மார்க் மற்றம் கிரீன்லாந்து அதிகாரிகள்  ரேஞ்சர்ஸ் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் கனடாவின் அந்த பிரிவு தற்போது அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆர்க்டிக் […]

ஐரோப்பா செய்தி

தேம்ஸ் நீர் நிறுவனத்தை அரசுடமையாக்குவது மீட்சியை தாமதப்படுத்தும் – முதலீட்டாளர்கள் எச்சரிக்கை

  • May 17, 2026
  • 0 Comments

கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் Andy Burnham முக்கிய நீர் மற்றும் எரிசக்தி நிறுவனங்களை மீண்டும் பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள Thames Water நிறுவனத்தை தற்காலிகமாக அரசுடைமையாக்குவது அதன் மீட்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் என அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டர் மேயரான பர்ன்ஹாம், தாம் ஒருநாள் பிரதமராக வந்தால் நீர் மற்றும் எரிசக்தி சேவைகளை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தனது […]

ஐரோப்பா செய்தி

வடக்கு இங்கிலாந்தில் ஒலிம்பிக் போட்டிகள்?

  • May 17, 2026
  • 0 Comments

2040 களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளில் நடத்துவதற்கான வாய்ப்பை அரசு பரிசீலித்து வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், 2012 லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் பிரித்தானியாவில் நடைபெறும். இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடும் பொறுப்பு UK Sport அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வில், திட்டத்தின் செலவுகள், வடக்கு பகுதிகளுக்கு கிடைக்கக்கூடிய பொருளாதார மற்றும் சமூக நன்மைகள், மேலும் பிரித்தானியாவின் முயற்சி வெற்றி பெறும் வாய்ப்புகள் போன்றவை […]

உலகம்

உலக அவசரநிலை பிரகடனம்

  • May 17, 2026
  • 0 Comments

எபோலா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ​கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. எபோலா வைரஸ் பாதிப்பால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துடன், வைரஸ் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்டை நாடுகளான உகண்டா, தென் சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

மொஸ்கோ மீது தீவிர ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்த உக்ரைன் – நால்வர் பலி!

  • May 17, 2026
  • 0 Comments

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் மொஸ்கோவில் 03 பேரும் நான்காவது நபர்   உக்ரைனை ஒட்டியுள்ள பெல்கோரோட் பிராந்தியத்திலும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் வான்பரப்பில் 1,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.  

உலகம்

காசாவில் ட்ரோன் மழை – ஒருவர் உயிரிழப்பு!

  • May 17, 2026
  • 0 Comments

காசாவில் உள்ள சமயலறை ஒன்றை குறிவைத்து இஸ்ரேல் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னதாக, தெற்கு காசாவின் கான் யூனிஸில் நடந்த இஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.