தேம்ஸ் நீர் நிறுவனத்தை அரசுடமையாக்குவது மீட்சியை தாமதப்படுத்தும் – முதலீட்டாளர்கள் எச்சரிக்கை
கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் Andy Burnham முக்கிய நீர் மற்றும் எரிசக்தி நிறுவனங்களை மீண்டும் பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள Thames Water நிறுவனத்தை தற்காலிகமாக அரசுடைமையாக்குவது அதன் மீட்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் என அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரேட்டர் மான்செஸ்டர் மேயரான பர்ன்ஹாம், தாம் ஒருநாள் பிரதமராக வந்தால் நீர் மற்றும் எரிசக்தி சேவைகளை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தனது முக்கிய கொள்கைகளில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதிய முதலீடுகள் கிடைக்காவிட்டால், தேம்ஸ் நீர் நிறுவனம் நவம்பர் மாதத்திற்குள் கடும் பணத்தட்டுப்பாட்டை சந்திக்கக்கூடும் என கூறப்படுகிறது.
ஆனால், கடன் வழங்குநர்கள் தலைமையிலான மீட்பு திட்டம் குறித்து நீர் ஒழுங்குமுறை அமைப்பான Ofwat உடன் பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மீட்பு திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன், கோடைக்காலத்தில் ஆறு வார பொதுக் கலந்தாய்வும் அதன் பின்னர் பதில்களை ஆய்வு செய்ய கூடுதல் காலமும் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





