இலங்கை செய்தி

IMF இன் 5 ஆவது, 6 ஆவது மதிப்பாய்வுகள் மே 27 இல்

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி மதிப்பீட்டிற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இந்தக் கூட்டத்தின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாட்டின் நிதிச் சீர்திருத்தத் திட்டத்தின் வெற்றி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு ஆராயவுள்ளது.

இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிதி முகாமை மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் இதில் பிரதானமாக மதிப்பிடப்படும் என கூறப்படுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் இந்த மதிப்பாய்வு அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!