உக்ரைனின் 09 நகரங்கள் மீது ரஷ்யா கோர தாக்குதல்
உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு குண்டுமழை பொழிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் இன்று அதிகாலை வரை நீடித்துள்ளது.
ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்ளக்கூடிய அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு கடும் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மொஸ்கோவின் அதிவேக ஜெட்-இயந்திர ஆளில்லா விமானங்கள் மற்றொரு சவாலை ஏற்படுத்தியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே உக்ரைனும் ரஷ்ய மண்ணில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
இந்த பரஸ்பர தாக்குதலில் உக்ரைன் தரப்பில் 02 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.




