இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு யார் காரணமோ அவர்களுக்கே மக்கள் பதவி வழங்கியுள்ளனர் – அருட்தந்தை ஆதங்கம்

  • May 17, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான இறுதி ஆயத்தங்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்படுவதை நாம் அறிவோம்.இது வெறும் […]

இலங்கை செய்தி

17 வருடங்கள் கடந்தும் போர் குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை – பிரபல நடிகர் நிழல்கள் ரவி கவலை

  • May 17, 2026
  • 0 Comments

யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சிங்கள அரசின் அடக்குமுறையை எதிர்த்து தமிழ் இனம் 30 ஆண்டுகள் உரிமைக்காக ஆயுதம் தூக்கி போராடியது. கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் […]

ஐரோப்பா செய்தி

ஸ்கொட்டிஷில் பெரும் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல் – பலர் கைது

  • May 17, 2026
  • 0 Comments

ஸ்கொட்டிஷ் பிரீமியர்ஷிப் பட்டத்தை செல்டிக் எப்.சி (Celtic F.C) அணி வென்றதைத் தொடர்ந்து, இரசிகர்கள் Glasgow நகரில் திரண்டபோது பெரும் கலவரம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்ட்ஸ் (Hearts) அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வெற்றியை கொண்டாட, சுமார் 3,000 செல்டிக் ரசிகர்கள் ட்ரொங்கேட் (Trongate) பகுதியில் கூடியுள்ளனர். இந்த நிலையில், மருத்துவ அவசர உதவியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டதால் பல அதிகாரிகள் காயமடைந்ததாக ஸ்கொட்லாந்து பொலிஸார் […]

இலங்கை

மீனவரின் வலையில் சிக்கிய மனித உடல் – மட்டக்களப்பில் பரபரப்பு!

  • May 17, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் மீன்பிடிக்கச்சென்ற மீனவரின் வலையில் மனித உடல் ஒன்று சிக்கியது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த மீனவர் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் குறித்த சடலத்தை இனங்கண்டுள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சம்பவ தினத்தன்று மதுபானம் அருந்திய நிலையில் […]

உலகம்

கனடாவில் ஹன்டா வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிப்பு!

  • May 17, 2026
  • 0 Comments

எம்வி ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து இறங்கிய பிறகு, ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிக்கு லேசான அறிகுறிகள் இருந்ததாகவும் தற்போது அவர்    பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹண்டா வைரஸ் தொற்றால் 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

Make England Great Again : ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்!! 40இற்கும் மேற்பட்டோர் கைது!

  • May 17, 2026
  • 0 Comments

டாமி ராபின்சனின் ‘யுனைட் தி கிங்டம்’ பேரணி மற்றும் பாலஸ்தீன ஆதரவு நக்ஃபா தினப் பேரணி ஆகிய இரண்டு முக்கிய ஆர்ப்பாட்டங்களின் போது 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, சுமார் £4.5 மில்லியன் செலவில் 4000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கணிசமான காவல்துறைப் பாதுகாப்பும் இருந்தபோதிலும், பல்வேறு குற்றங்களுக்காக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் டாமி ராபின்சன் பேரணியில், ராபின்சன் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் கட்டளையை மீறிச்சென்ற கார் விபத்து – 09 பேர் காயம்

  • May 17, 2026
  • 0 Comments

லண்டன் நகரின் கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச்சென்ற காரொன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை நிறுத்த பொலிஸார் முயன்றபோது, அந்த கார் நிற்காமல் தப்பிச் சென்றதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த கார் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு கார்களிலும் இருந்தவர்கள் மற்றும் ஒரு மோட்டார் ஸ்கூட்டர் ஓட்டுநர் உட்பட மொத்தம் 10 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஒன்பது பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக […]

இந்தியா

பத்திர மோசடி : அதானி மீதான வழக்கை கைவிட தயாராகும் அமெரிக்கா!

  • May 17, 2026
  • 0 Comments

இந்திய தொழில் அதிபரான அதானி மீதான குற்றவியல் மோசடி வழக்கை கைவிட அமெரிக்கா தீர்மானித்துள்ளது. பத்திர மோசடி, சதித்திட்டம் மற்றும் கம்பிவழி மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதானி,  18 மில்லியன் டொலர் செலுத்த ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதானியும்  அவரது மருமகன் சாகர் அதானியும் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துடன் இந்த சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன்  இந்த ஒப்பந்தம் நீதிமன்ற ஒப்புதலுக்கு உட்பட்டது எனவும், […]

ஆஸ்திரேலியா செய்தி

நடுவானில் பயங்கரம்: பணிப்பெண்ணைக் கடித்த பயணி!

  • May 17, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்ற விமானத்தில், பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த விமானம் அவசரமாகத் திசைதிருப்பப்பட்டுத் தரை இறக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு நேற்று மதியம் குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் அங்கிருந்த ஊழியர்களிடம் மிகவும் மோசமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டார். ஒரு கட்டத்தில் அவர் அங்கிருந்த விமானப் பணிப்பெண் […]

உலகம்

காங்கோ மக்களை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று – அவசரநிலை அறிவிப்பு!

  • May 17, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் நோய் பரவியதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் மூன்று சுகாதார மண்டலங்களில், நேற்று (16)    எட்டு நோய்த்தொற்றுகள், மற்றும் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், 246 பேர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தே அவசர நிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை உகாண்டாவின் […]