மொஸ்கோ மீது தீவிர ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்த உக்ரைன் – நால்வர் பலி!
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் மொஸ்கோவில் 03 பேரும் நான்காவது நபர் உக்ரைனை ஒட்டியுள்ள பெல்கோரோட் பிராந்தியத்திலும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் வான்பரப்பில் 1,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.





