உலகம்

OPEC+ அமைப்பு இன்று கூடுகிறது!

  • May 3, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகம் ஒபெக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து ஒபெக்+ அமைப்பின் ஏழு உறுப்பு நாடுகள் இன்று கூடவுள்ளன. எண்ணெய் உற்பத்தி அளவுகள் குறித்து முடிவெடுப்பதற்காக உறுப்பு நாடுகள் ஒன்றுக்கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய முக்கிய எண்ணெய் உற்பத்தியாளரான ஐக்கிய அரபு அமீரகம், கடந்த வெள்ளிக்கிழமை ஒபெக் மற்றும் அதன் பெரிய அமைப்பான ஒபெக்+-இலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. எண்ணெய் உற்பத்தி தொடர்பில் அவ் அமைப்பு விதித்த வரம்புகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மேற்படி […]

இலங்கை செய்தி

பாரியளவான சட்டவிரோத நிதி மோசடி – 120 வெளிநாட்டவர்கள் கைது

  • May 3, 2026
  • 0 Comments

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து ஏராளமான கணினிகள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மெத வெலிக்கடை வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, இவர்கள் […]

இலங்கை

இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு பேரிடி!

  • May 3, 2026
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின்  மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக, வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று   வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மனங்கே, எச்சரிக்கை விடுத்துள்ளார். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியானது, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவை கணிசமாகப் பாதித்து, விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மே மாதம் முதல் அமலுக்கு வரும் வகையில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியில் (SSCL) 2.5% உயர்வு, இந்த விலை உயர்வுக்கு […]

ஐரோப்பா

தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவத் தயாராகும் ரஷ்யா!

  • May 3, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவத் தயாராக இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனிய இராணுவத் தளபதி ரோமன் கோஸ்டென்கோ (Roman Kostenko) இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். இந்த மோதலில் ரஷ்யா தோல்வியை சந்திப்பதாக உணர்ந்தால், அது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். பல கிலோடன்கள் முதல் பல பத்து கிலோடன்கள் வரையிலான ஆற்றல் கொண்ட தந்திரோபாய அணு ஆயுதங்களை ரஷ்யா ஏவக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். […]

இந்தியா செய்தி

எரிவாயு விலை உயர்வு – மே 07 இல் தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம்

  • May 3, 2026
  • 0 Comments

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வேயில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் குறைக்கப்படுவதை கண்டித்து,  எதிர்வரும் 07 ஆம் திகதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சிபிஐ (எம்.எல்) லிபரேசன் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை கடந்த […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ விமான நகர்வு அதிகரிப்பு

  • May 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்கா இராணுவ விமானங்களின் செயல்பாடு திடீரென அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் விமானப் போக்குவரத்தில் கணிசமான உயர்வு காணப்படுவதுடன், இதில் பெரும்பாலும் போக்குவரத்து விமானங்கள் மற்றும் வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. விமானப் பயணங்களை கண்காணிக்கும் Flightradar24 செயலியின் தகவலின்படி, சனிக்கிழமையன்று ஐரோப்பா விலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அமெரிக்க இராணுவ விமானங்களின் எண்ணிக்கையில் அசாதாரணமான உயர்வு பதிவாகியுள்ளது. அனுப்பப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை C-17A Globemaster III ரக […]

உலகம் செய்தி

அணு ஒப்பந்தம் குறித்த அமெரிக்கா–ஈரான் பதற்றம் மீண்டும் அதிகரிப்பு

  • May 3, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான அணு ஒப்பந்த விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போர் நிறுத்தம் அல்லது புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டால், ஈரான் யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருவதுடன், அதனைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக, ஈரான் தங்கள் அணு திட்டம் முழுமையாக குடிமைப் பயன்பாட்டுக்காக மட்டுமே எனவும், மின்சாரம் […]

பொழுதுபோக்கு

சரிகமபவில் அதிரடி Entry! கதறி அழுத தந்தை

  • May 3, 2026
  • 0 Comments

சரிகமப நிகழ்ச்சியில் 11 ஆவது போட்டியாளராக Wild card மூலம் மகதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சரிகமபவில் நேற்று Wild card சுற்று நடைபெற்றது. எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். அனைத்து போட்டியாளர்களும் திறமையாக பாடியிருந்ததால் யார் இறுதிப் போட்டியாளர் என்ற குழப்பம் பார்வையாளர்களிடம் இருந்தது. இந்த நிலையில் மகதி இறுதி போட்டிக்குள் நுளைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத மகதியின் தந்தை கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறியது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

இந்தியா

டெல்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து – 09 பேர் உடல்கருகி பலி!!

  • May 3, 2026
  • 0 Comments

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள  குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு வயது குழந்தை உட்பட 09  பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இன்று அதகாலை தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், தீ கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களுக்கு பரவியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கட்டிடத்திற்குள் இருந்த பத்துக்கும் […]

இலங்கை முக்கிய செய்திகள்

VAT வரியை அதிகரிக்க முன்மொழிவு – புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

  • May 3, 2026
  • 0 Comments

திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை  நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பின்படி,  ஜூலை 1 முதல் மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு VAT வரி அறவிடப்படும். இதற்காக டிஜிட்டல் சேவைகள் மீதான வரிப் பதிவு மற்றும் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பிரதான சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் வரிப் பதிவுக்கான வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரி விதிக்கத்தக்க காலப்பகுதியின் முடிவில், இலங்கைக்குள் […]