OPEC+ அமைப்பு இன்று கூடுகிறது!
ஐக்கிய அரபு அமீரகம் ஒபெக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து ஒபெக்+ அமைப்பின் ஏழு உறுப்பு நாடுகள் இன்று கூடவுள்ளன.
எண்ணெய் உற்பத்தி அளவுகள் குறித்து முடிவெடுப்பதற்காக உறுப்பு நாடுகள் ஒன்றுக்கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய முக்கிய எண்ணெய் உற்பத்தியாளரான ஐக்கிய அரபு அமீரகம், கடந்த வெள்ளிக்கிழமை ஒபெக் மற்றும் அதன் பெரிய அமைப்பான ஒபெக்+-இலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.
எண்ணெய் உற்பத்தி தொடர்பில் அவ் அமைப்பு விதித்த வரம்புகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மேற்படி முடிவெடுத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் இந்த ஏழு நாடுகளும் தங்களின் தினசரி உற்பத்தியை 188,000 பீப்பாய்கள் அளவுக்கு உயர்த்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





