VAT வரியை அதிகரிக்க முன்மொழிவு – புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூலை 1 முதல் மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு VAT வரி அறவிடப்படும். இதற்காக டிஜிட்டல் சேவைகள் மீதான வரிப் பதிவு மற்றும் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பிரதான சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் வரிப் பதிவுக்கான வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரி விதிக்கத்தக்க காலப்பகுதியின் முடிவில், இலங்கைக்குள் பொருட்கள் அல்லது சேவைகளின் விநியோகத்தின் மொத்த மதிப்பு 9 மில்லியன் ரூபாயைத் தாண்டியிருந்தால், அந்த நபர் வரிக்காகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
அதேபோல், நிதிச் சேவைகள் மீதான VAT வரி வீதத்தை தற்போதுள்ள 18 சதவீதத்திலிருந்து 20.5 சதவீதமாக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.




