டெல்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து – 09 பேர் உடல்கருகி பலி!!
டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு வயது குழந்தை உட்பட 09 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இன்று அதகாலை தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், தீ கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களுக்கு பரவியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கட்டிடத்திற்குள் இருந்த பத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகவும், உயிரிழந்த ஒன்பது பேரின் அடையாளங்களும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாவது மாடியில்தான் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்த மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.
தீவிபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




