இலங்கை செய்தி

பாரியளவான சட்டவிரோத நிதி மோசடி – 120 வெளிநாட்டவர்கள் கைது

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து ஏராளமான கணினிகள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மெத வெலிக்கடை வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, இவர்கள் இந்த மோசடி வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது நடவடிக்கையின் போது இவர்களில் குழுவொன்று தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களைக் கைது செய்வதற்காக வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!